ARTICLE AD BOX
Kalpana Daughter Explains It Was Not A Suicide Attempt : தென்னிந்திய திரையுலகிலேயே தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு பெயர் கல்பனா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடல் பாடியிருக்கும் இவர், தனது வீட்டில் அதிகளவில் தூக்க மாத்திரை போட்டு தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து அவரது மகளே விளக்கம் தெரிவித்துள்ளார்.
அதிக தூக்க மாத்திரை போட்ட கல்பனா:
பின்னணி பாடகி கல்பனா, கடந்த புதன்கிழமை (நேற்று) ஐதராபாத்தில் நடந்த தனது வீட்டில், அதிக தூக்க மாத்திரை போட்டு மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு வெண்டிலைட்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கல்பனா, தற்கொலை செய்து கொள்வதற்காகத்தான் அதிகளவில் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும், இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது குறித்தும் பலர் கூறி வந்தனர், இந்த நிலையில், இது குறித்து அவரது மகள் தெரிவித்து இருக்கிறார்.
மகள் விளக்கம்:
கல்பனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது மகள் இது குறித்து பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தனது தாய் தற்கொலை முயற்சி எதுவும் செய்யவில்லை என்றும், அவர் தினமும் எடுக்கும் மாத்திரையில் கொஞ்சம் அதிகமாக எடுத்ததால் அது overdose ஆகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இவை, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைதான் என்றும் கூறியிருக்கிறார். இதை தவிர்த்து, தங்களின் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பிரச்சனை என்ன?
இது குறித்து கல்பனா கூறியதை போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் தூக்கம் வருவதற்காக 8 மாத்திரை எடுத்துக்கொண்டதாகவும், அப்போதும் உறங்க முடியாததால் 10 மாத்திரை போட்டதாகவும் அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறியிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக, கல்பனாவிற்கும் அவரது மகளுக்கும் இடையே அவரது படிப்பு விஷயம் காரணமாக அடிக்கடி சண்டை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான், கல்பனா உறங்க முடியாமல் அவஸ்தை பட்டிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலை என்ன?
தற்போது கல்பனா, ஐதராபத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரலில் அதிக தண்ணீர் புகுந்ததால் அதற்கான சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இவர்?
பாடகி கல்பனா சென்னையை சேர்ந்தவர். இவருக்கு, தற்போது 44 வயது ஆகிறது. இவர் பிரபல பாடகர் டி.எஸ் ராகவேந்திராவின் மகளாவார். தமிழ்-தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார். இவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்று கவனம் ஈர்த்திருக்கிறார்.
மேலும் படிக்க | பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முயற்சி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
மேலும் படிக்க | பாலியல் அத்துமீறல்..தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை! மனதை நொறுக்கும் கதை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ