பாடகர், இசையமைப்பாளர், கதாநாயகன், இப்போ தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ்

11 hours ago
ARTICLE AD BOX

இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் டார்லிங் என்ற படத்தில் கதாநாயகனாக நடிப்பு பயணத்தை தொடங்கி தற்போது தயாரிப்பாளராக புதுஅவதாரம் எடுத்துள்ளார்.

பிரகாஷ் குமார் ஜி. வெங்கடேஷ், பின்னணிப் பாடகி ஏ. ஆர். ரைஹானாவின் மகன் ஜி.வி.பிரகாஷ். ரைஹானா இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் பாடிய சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடல் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. ஏ. ஆர். ரகுமானின் இசைகளில் பாடி வந்த இவர், அடுத்து ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து அந்நியன், உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களிலும் பாடியுள்ளார். அதனை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் 2006-ல் வெளிவந்த ‘வெயில்’ திரைப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:
பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ்... இயக்குனர் யார் தெரியுமா?
GV Prakash

மதராசபட்டினம், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன ஆகிய படங்களின் இசைக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தனது இசைப்பயணத்தில் பயணித்தார்.

இசையமைப்பாளராக இருந்த இவர் நடிப்பில் மேல் இருந்த தீராத ஆசையால் 2015-ல் டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, புரூஸ் லீ, பென்சில், ஐங்கரன், வாட்ச்மேன்,100% காதல் என தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிரபல இசை அமைப்பாளரார் மற்றும் பின்னணி பாடகராக மட்டும் இல்லாமல், ஒரு நடிகராக திறமையை வெளிப்படுத்தி ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகன் ஆன ஜி.வி.பிரகாஷ் இப்போது ‘கிங்ஸ்டன்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக புது அவராதம் எடுத்துள்ளார். இந்த படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். கமல் பிரகாஷ் இயக்கும் ‘கிங்ஸ்டன்' ஜி.வி.பிரகாஷ்க்கு 25-வது திரைப்படமாகும். ஹாரி பாட்டர் படம் போன்று நம்மூர் சாயலில் கிங்க்ஸ்டன் படத்தை எடுத்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

'18 வருடங்களாக இயக்குனர் வெற்றிமாறனோடு இணைந்து பயணிக்கிறேன். முதலில் நான் நடிக்க போகிறேன் என்றதும் இயக்குனர் வெற்றிமாறன் வேண்டாம் என்று என்னை தடுத்தார். பிறகு அவரே நடிப்பு பயிற்சி எடுக்க என்னை அனுப்பிவைத்தார்' என கூறினார்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன் - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!
GV Prakash

நடிகர் கமல்ஹாசனிடம் சென்று தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள தகவலை கூறி இந்த நிறுவனம் தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தின் முதல் காட்சியை நீங்கள்தான் இயக்க வேண்டும் என்று கூறினேன். அவரும் மறுப்பு சொல்லாமல் வந்து முதல் காட்சியை இயக்கி கொடுத்ததாக நெகிழ்ச்சியோடு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

ஒரே சமயத்தில் முன்னணி இசையமைப்பாளர், பாடகர், ஹீரோ, இப்போ தயாரிப்பாளர் என தன்னை பிசியாக வைத்து கொண்டு கோலிவுட்டை கலக்கி வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

Read Entire Article