பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா யார்? சீக்ரெட் உடைக்கும் குபேந்திரன்!

6 hours ago
ARTICLE AD BOX

அதிமுகவில் செங்கோட்டையன் கலகம் செய்யவில்லை என்றும், அவரை பயன்படுத்தி வேறு யாரோ கலகம் செய்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் ஆகியோர் இடையிலான மோதலின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் குபேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எம்ஜிஆர் – ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியிருந்தார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1991ல்  ஆட்சிக்கு வந்த பிறகு எம்ஜிஆர் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியதற்காக அதிமுக தொண்டர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால், அந்த ஒரு விஷயத்திற்காக தான். ஏனென்றால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, எம்.ஜி.ஆரின் புகழை பெரிய அளவில் பாராட்டுவதோ,  அதிமுகவின் பொதுக்கூட்ட மேடைகளிலேயே எம்ஜிஆரின் பாடல்களை அதிகளவில் ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று ரகசிய உத்தரவு போடப்பட்டிருந்தது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.

அப்படிபட்ட ஒரு விவாதத்தை செங்கோட்டையன் கிளப்பியதற்காக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதிமுக மகிழ்ச்சி அடையும் நிலையில் உள்ளதா? . 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சியாக 72 இடங்களுக்கு மேல் வென்ற அதிமுக இன்று படிப்படியாக தேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த கவலை யாருக்கு இருக்க வேண்டும். கட்சியின் தலைவருக்கு இருக்க வேண்டும். குறிப்பாக செங்கோட்டையனுக்கு இருக்க வேண்டும். தன்னுடைய சொந்த மாவட்டத்தில் எடப்பாடியின் உறவினரான கருப்பணனை வைத்துக்கொண்டு, அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் புதிதாக பதவி ஏற்கும் நிர்வாகிகள் யாருமே  செங்கோட்டையனை மதிப்பது கிடையாது. இந்த மனக்குமுறலில்தான், அத்திக்கடவு – அவினாசி திட்டம் குறித்த அழைப்பிதழை பயன்படுத்திக்கொண்டார். இதுதவிர செங்கோட்டையன் பெரிய புரட்சியை ஏற்படுத்துவார். அல்லது பாஜக அவரை கையில் எடுத்துள்ளதாக கூறுவதோ, வேறு யாரோ அவரை இயக்குவதாக கூறுவதோ தவறானது.

எடப்பாடி பழனிசாமி செய்கிற தவறு, பத்திரிகையாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்புகிறபோது அதை அவரிடம் போய் கேளுங்கள் என்று சொல்வது அவரது பலவீனத்தை தான் காட்டுகிறது. செங்கோட்டையன் என்று பெயர் சொன்னாலே எடப்பாடியின் முகம் மாறுகிற அளவிற்கு ஏன் வருகிறது. அது தவறானது. இந்த விவகாரத்தை அவர் சரியாக கையாளவில்லை. எதோ ஒரு வகையில் செங்கோட்டையன், எடப்பாடியின் முகத்தை பார்க்க சங்கடப்படுகிறார் என்று வைத்துக்கொண்டால் இந்த கேள்வியை போய் அவரிடம் கேள் என்று சொல்லக்கூடாது. ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளை சமாளித்து பதில் சொல்லும் திறமை அரசியல் தலைவர்களுக்கு வேண்டும். ஆனால் இப்படி சொல்லியதால் அதிமுகவில் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் பெரிய சண்டை நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை பெரிதுபடுத்தி காட்டியிருக்கிறார்.

"14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி! "மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?" என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. சார்பில் நல்லதம்பியை ஆதரித்துப் பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி, "மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? நீட் தேர்வைக் கொண்டு வந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளே இன்றைக்கு அதனை ரத்து செய்வோம் என்று சொல்கிறது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க. தான். தி.மு.க. கூட்டணியின் 38 எம்.பி.க்கள். தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகள் தேசிய அளவில் மட்டுமே யோசிப்பதால் கூட்டணி வைக்கவில்லை. ஆட்சி, அதிகாரத்துக்கு அ.தி.மு.க. என்றைக்கும் அடி பணிந்தது கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு – அவினாசி பாராட்டு விழா விவகாரத்தில் இப்படி ஒரு செய்தி பரப்புகிறபோது எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்? இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அப்போதே அவரை அழைத்துப் பேசி சாமாதானம் செய்திருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றால்? சசிகலாவை வீழ்த்திவிட்டோம், டிடிவி தினகரனையே ஓரங்கட்டிவிட்டோம். செங்கோட்டையன் எம்மாத்திரம் என்று நினைக்கலாம். ஆனால் செங்கோட்டையன் பேசிய பேச்சு, அதிமுகவினர் இடையே கலகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அவர் கேட்டது எம்ஜிஆர் – ஜெயலலிதாவைதான். பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மத்தியில் செங்கோட்டையனுடைய பேச்சு வரவேற்புக்குரியதாக இருக்கிறபோது, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். செங்கோட்டையன் அதிமுக கூட்டங்களை தவிர்ப்பது, ஆட்களை செட் செய்து கூட்டத்தினர் முன்னிலையில்  அவரை கேள்வி எழுப்பினால் அதை சமாளிப்பது கடினமாகும். மற்றபடி அவர் அதிமுகவில் இருந்துகொண்டோ? அல்லது வெளியே சென்றோ புரட்சியை ஏற்படுத்தி விடுவாரா? என்றால் நிச்சயமாக இல்லை. இது அவர்கள் இருவருக்குமே  தெரியும். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எடப்பாடி தயங்குகிறார்.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

செங்கோட்டையன் கட்சிக்குள், ஓரங்கட்டப்படுவது என்பது உண்மையாகும். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பணன் ஈரோட்டில் செய்யும் விஷயம், செங்கோட்டையனுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பங்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறபோது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஓபிஎஸ் குறித்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். இந்நேரரத்தில் அமைதியாக இருக்க வேண்டும். மவுனமாக இருக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தபோது, இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார் என்று சொல்கிறார். அப்போது, இந்த விவகாரத்தில் அவரை அழைத்து பேசினாலே, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

யூடியூப் சேனல் ஆண்டு விழாவுக்கு செங்கோட்டையன் போகக்கூடாது என்று சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள். செங்கோட்டையனை பயன்படுத்தி வேறு யாரோ கலகம் செய்கிறார்களோ என்று எனக்கு தோன்றுகிறது. தமிழகத்தில் வழக்கமாக எதிர்க்கட்சியை உடைப்பது ஆளுங்கட்சியாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வேலையை பாஜக செய்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவின்போது அதிமுகவை, பாஜக எப்படி கையாண்டது என்று பார்த்தோம். முதலில் ஓபிஎஸ்-ஐ கையில் எடுத்து தர்மயுத்தம் நடத்தினார்கள். அப்போது எடப்பாடி, சசிகலா, தினகரன் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். சசிகலா சிறைக்கு சென்றபிறகு எடப்பாடி, தினகரன் ஒன்றாக இருந்தார்கள். இறுதியில் ஓபிஎஸ் – எடப்பாடி ஒன்று சேர்ந்துகொண்டு, தினகரன் வெளியே சென்றுவிட்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி வெற்றி பெற்றார். ஆனால் பாஜக-வை கடுமையாக எதிர்த்தார். தன் வாழ்நாள் முழுவதும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சபதம் போட்டார். ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா கொடுத்த நல்லாட்சியை பாஜக வழங்கும் என்கிறார். அப்போது பாஜகவினுடைய சித்து விளையாட்டு எப்படி இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Read Entire Article