ARTICLE AD BOX
ஏ கிரேடு குற்றவாளியான படப்பை குணா, கொலை, மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் ஏற்கனவே 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 5வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Padappai Guna Arrest : தமிழகத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைக்கவும், காவல்துணை கண்காணிப்பில் வைத்தும் வருகிறது.
மேலும் 39 மாவட்டங்கள், 9 மாநகர ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப் பதிவேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளின் நடவடிக்கைகளை அப்பகுதிகளில் உள்ள போலீசார் கணிகாணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மாவட்டங்களை கலக்கி வருபவர் ஏ கிரேடு குற்றவாளி படப்பை குணா, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கடத்தி பணம் பறிப்பது. கட்டப்பஞ்சாயத்து மேற்கொள்வது மட்டுமில்லாமல் கொலை மற்றும் சிறு குறு தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் படப்பை குணா, இவர் மீது 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி கொலை வழக்கு உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இதனையடுத்து படப்பை குணாவும் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அடிதடி வழக்கில் கைதான படப்பை குணாவின் மீது கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு வருடங்களுக்கு பிறகு வெளியே வந்த நிலையில் மீண்டும் குற்ற சம்பங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை படப்பை குணா தாக்கியுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் படப்பை குணா மார்ச் 6ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் படப்பை குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள படப்பை குணா தற்போது 5வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.