ARTICLE AD BOX
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இந்த போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே மறித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.