பாஜ மொழி அரசியல் செய்கிறது: துரை வைகோ எம்பி குற்றச்சாட்டு

3 days ago
ARTICLE AD BOX

மதுரை: பாஜ மொழியை வைத்து அரசியல் செய்வதாக துரை வைகோ எம்பி குற்றம் சாட்டினார். மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எம்பி, மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார். தமிழ்நாட்டில் பாஜவை தவிர அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களும், இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இன்றைக்கு உலக அளவில் மருத்துவத்துறை, வர்த்தகத் துறை, தொழில் துறை ஆகியவற்றில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஆங்கில புலமை தான் காரணம். இன்றைய பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகம். மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும். பொறியியல் படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது.

எதற்காக மாணவர்கள் மூன்றாவது மொழி படிக்க வேண்டும். மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால், மூன்றாவது மொழியை தேர்ந்தெடுத்தால் இந்தியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். மொழியை அரசியல் ஆக்குவது பாஜ மட்டும் தான். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதன் மூலமாக அவப்பெயரை ஏற்படுத்துவது அல்லது ஆளுநர் மூலமாக இடையூறு அளித்து, மாநில அரசுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதை அரசியல் ஸ்டேட்டஸ் ஆக செய்கிறார்கள். இவ்வாறு கூறினார்.

 

The post பாஜ மொழி அரசியல் செய்கிறது: துரை வைகோ எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article