பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து விளையாடுகிறார்கள்.. திமுக, பாஜவை விளாசிய தவெக விஜய்

1 day ago
ARTICLE AD BOX

பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து விளையாடுகிறார்கள்.. திமுக, பாஜவை விளாசிய தவெக விஜய்

Chennai
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்மொழி கொள்கை விஷயத்தில் பாசிசமும், பாயாசமும் பேசி வைத்து செட்டிங் செய்துகொண்டு மாற்றி மாற்றி விளையாடுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார். எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போட்டுக்கொள்வார்களே.. அதுபோல செய்துகொண்டிருக்கிறார்கள் என்று மத்திய, மாநில அரசுகளை மறைமுகமாக விஜய் விமர்சித்து பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடந்தது. இதில் தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கட்சி தலைவர் விஜய், மும்மொழி கொள்கை விஷயத்தில் பாசிசமும், பாயாசமும் பேசி வைத்து செட்டிங் செய்துகொண்டு மாற்றி மாற்றி விளையாடுகிறார்கள் என்று பேசினார்.

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

விஜய் பேசியதாவது:- மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை கொடுக்க மாட்டார்களாம். இந்த எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போட்டுக்கொள்வார்களே.. அதுபோல.. கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. இதை எப்படியாவது வாங்க வேண்டியது என்பது இவர்களுடைய உரிமை.

ஆனால் இவங்க இரண்டு பேரும், இவ்வளவு பெரிய சீரியஸான விஷயம் நடந்துகொண்டிருக்கும் போது, அதான் நம்ம பாசிசமும், பாயாசமும்.. அதாங்க நம்ம அரசியல் எதிரியும்.. கொள்கை எதிரியும் என்ன பண்றாங்க என்றால், பேசி வைத்துக் கொண்டு.. இரண்டு பேரும் செட்டிங்க் செஞ்சுக்கொண்டு மாத்தி மாத்தி சோசியல் மீடியாக்களில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுகிறார்கள்.

இங்க என்ன நடந்துகொண்டிருக்கிறது. அதாவது இவங்க இரண்டு பேரும் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கொள்வாங்களாம். இதை நாம நம்பனுமாம். இந்த இரண்டுக்கும் நடுவில நம்ம பசங்க புகுந்து சைலண்டா சம்பவம் செஞ்சுட்டு போயிட்றாங்க.. இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
English summary
Tamil Nadu Vetri Kalagam leader Vijay said that fascism and payasam are being talked about and set up and played with. LKG and UKG will fight each other.. Vijay indirectly criticized the central and state governments saying that they are doing the same.
Read Entire Article