ARTICLE AD BOX

Bakkiyalakshmi: பிரபல பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் நடிகை நேஹா சென்னை ஐபிஎல் அணியை சேர்ந்த ஒரு முக்கிய வீரரை காதலிப்பதாக தகவல் பரவி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியாவின் மகள் இனியாவாக நடித்து வருபவர் நேஹா. ஆரம்பத்தில் இருந்தே பொறுப்பு இல்லாத ஒரு கேரக்டராகவே இனியாவை கொண்டு வந்தனர்.
இதனாலே பல நேரத்தில் ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டு வந்தார். சமீபத்தில் கூட நடன போட்டியில் இவரை பீலிங்ஸ் பாட்டுக்கு பரதநாட்டியம் டிரஸ் போட்டு ஆட வைக்க அதுவே இணையத்தில் புகைச்சலை கிளப்பி விட்டது. பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.
தற்போது கிளைமேக்ஸ் நோக்கி செல்லும் சீரியலில் இனியாவின் காதல் பிரச்னை நடந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் அம்மணிக்கு உண்மையிலேயே காதல் விவகாரம் ஒன்று இருப்பதாக தெரிகிறது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் பதிரானா.

இவரை நேஹா காதலிப்பதாக விஷயம் கசிந்து இருக்கிறது. அடிக்கடி இருவரும் சந்திப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து ஒரு பேட்டியில் நேஹா எனக்கு கிரிக்கெட்டே தெரியாது. ஒருமுறை அவரை ஐபிஎல் பார்க்க போனேன். அப்போ தான் பதிரானாவை பார்த்து உள்ளேன்.
மேலும் அவருடைய பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்தேன். அதை பார்த்து இந்த வதந்தியை பற்ற வைத்து இருக்கலாம். ஆனால் இதில் உண்மை இல்லை. நல்லா இருக்கிறதால் அனுபவித்தேன். ரொம்ப பெருசாகிறதால் தற்போது உண்மையை சொல்லிவிடுகிறேன். எனக்கு யார் மேலும் காதல் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.