பாக்கியலட்சுமி சீரியல் முடிவு இன்னும் எத்தனை நாளில்! வெளிப்படையாக பேசிய ரேஷ்மா

3 hours ago
ARTICLE AD BOX

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு இன்னும் எத்தனை நாளில்! வெளிப்படையாக பேசிய ரேஷ்மா

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் முடிவு குறித்து அந்த சீரியலில் ராதிகாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பேசியிருக்கிறார்.

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்கள் தான் நீண்ட நெடுந்தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் பிரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையம் ஆகிவிட்டார்கள்.

Baakiyalakshmi Serial vijay TV

ரசிகர்களின் ஃபேவரைட் ராதிகா

அதிலும் ராதிகா கேரக்டரை சொல்லவே வேண்டாம். இந்த சீரியலில் பாக்கியாவிற்கு இருக்கும் ரசிகர்களை போல ராதிகாவிற்கும் இருக்கிறார்கள். எந்த இடத்திலும் ராதிகா தான் தைரியமாக செயல்படுகிறார். அதனால் ராதாகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள். பாக்யா ஆரம்பத்தில் கஷ்டப்படும் போது அவருக்கு உதவி செய்து அறிவுரை கூறியதும் ராதிகா தான். அதனால் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரேஷ்மா நன்கு பிரபலமடைந்து விட்டார்.

புஷ்பா கேரக்டர்

ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்தது இருந்தார். அந்தப் படம் இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஆனால் அதுபோன்ற கேரக்டரே அவருக்கு தொடர்ந்து நடிக்க வந்ததால் இப்போது அதிகமாக திரைப்படங்களில் நடிப்பதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரேஷ்மா தன்னுடைய சோக கதையை சொல்லி ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்திருந்தார்.

இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பாக்யலட்சுமி சீரியல் முடிவடைய போகிறது என்று கூறுகிறார்களே அதுவு பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்கப்பட்டிருக்கிறது.

விவாகரத்து கொடுத்தாச்சு

அதற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நான் தான் இப்போ கோபிக்கு விவாகரத்து கொடுத்து விட்டேனே, அதனால் என்னுடைய காட்சிகள் அதிகமாக இல்லை. எப்பவாவது தான் வந்து போவது போல இருக்கிறது. நானும் அதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கோபிக்கு விவாகரத்து கொடுத்தது நல்ல முடிவு என்று எல்லோரும் பாராட்டினார்கள்.

இந்த சீரியல் எனக்கு ரொம்பவும் டச் ஆன சீரியல். காரணம் இதில் நான்கு வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறேன். அதேபோல கார்த்திகை தீபம் சீரியல் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. இந்த சீரியலில் நடிகர் கார்த்திக் மற்றும் வடிவுக்கரசி போன்றோரோடு நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய பேர் அதுல நடிக்கிறாங்க எல்லோருமே தொடர்ந்து நடிப்பதற்கு ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாங்க.

சீரியல் முடிவு

அதுபோல எல்லோரும் பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடியப்போகிறது என்று கேட்கிறார்கள். ஆனால் சிரியல் முடிய போகிறது என்று சொல்லி இருக்கிறார்களே தவிர அது எப்போ முடிய போகிறது என்று இன்னும் சொல்லவில்லை. கதை போகிற போக்கை பார்த்தால் உங்களுக்கே புரிந்து இருக்கும் என்று தன்னுடைய வழக்கமான சிரிப்போடு அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

உதடு சர்ச்சைக்கு விளக்கம்

அதோடு ரேஷ்மா உதடு சர்ஜரி பண்ணி இருக்கிறாரா? என்று கேட்ட கேள்விக்கும் விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் சர்ஜரி பண்ணவில்லை எனக்கு அந்த அளவிற்கு தைரியம் இல்லை. முன்னாடி எல்லாம் பியூட்டி பார்லர் தான் மட்டும்தான் இருக்கும் இப்போ ஸ்கின் கேர் நிலையங்கள் தெருவுக்கு தெரு வர ஆரம்பித்துவிட்டது. அதனால் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் கூட பண்ணுகிறார்கள். ஆனாலும் எனக்கு சர்ஜரி பண்ணிக்கிற அளவிற்கு அவசியம் இல்லை என்று ரேஷ்மா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

More From
Prev
Next
English summary
baakiyalakshmi serial (பாக்கியலட்சுமி சீரியல் ): Actress Reshma Pasupuletty has spoken about the end of the Bhagilakshmi serial, which is aired on Vijay TV.
Read Entire Article