பாக்கியலட்சுமி: ஈஸ்வரியை லெப்ட் ரைட் வாங்கிய பாக்யா.. கோபி எடுத்த முடிவு.. மயூ சொன்ன விஷயம்

3 days ago
ARTICLE AD BOX

பாக்கியலட்சுமி: ஈஸ்வரியை லெப்ட் ரைட் வாங்கிய பாக்யா.. கோபி எடுத்த முடிவு.. மயூ சொன்ன விஷயம்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 21ம் தேவிக்கான எபிசோடில் பாக்கியா வீட்டிற்கு வந்த நபர்களிடம் ஈஸ்வரி சொன்ன வார்த்தையை கேட்டு பாக்யா கோபப்படுகிறார். அதே நேரத்தில் பாக்யா சொன்ன வார்த்தையை கேட்டு கோபி பீல் பண்ணுகிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயூவிடம் பாக்யா வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா வாங்கி கொடுத்த ட்ராயிங் புக்கில் தான் படம் வரைந்து இருக்கிறேன் என்று அதை காட்ட பாக்கியா சூப்பரா இருக்கு என்று மயூவை பாராட்டுகிறார். இன்னும் நிறைய இருக்கு ஆண்ட்டி நான் உங்களுக்கு அப்புறம் போட்டோ எடுத்து அனுப்புறேன் என்று சொல்ல சரி என்று பாக்யா போனை வைக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

மறுபக்கத்தில் ஈஸ்வரி கிச்சனின் சோகமாக உட்கார்ந்து கொண்டு இருக்க, கோபி ஹாலில் போன் பேசி விட்டு கிச்சனுக்கு வருகிறார். என்னம்மா எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க யாரும் ஏதாவது சொன்னாங்களா
என்று கேட்க, இல்ல யார் கிட்டயும் பேசுறதில்லை. இந்த வீட்டில் யாருமே இல்லை. நீயும் போன் பேசிக்கிட்டு இருக்க, இனியா மேல படிக்கிறா என்று சொல்ல சரி வாங்க வாக்கிங் போகலாம் என்று கோபி கூப்பிடுகிறார்.

ஆனால் ஈஸ்வரி நான் வரல என்று சொல்லிவிடுகிறார். சரி காரில் வெளியே போயிட்டு வரலாம் என்று கூப்பிட்டாலும் ஈஸ்வரி நான் வரல நீங்க வேணா போயிட்டு வாங்க நான் வரல மனசுக்கு கஷ்டமா இருக்கு என்று சொன்னதும் என்ன விஷயம் என்று கோபி கேட்கிறார். இந்த வீடு எப்படி இருந்தது ஆனா இப்போ இப்படி இருக்கிறது.

Baakiyalakshmi Serial vijay TV

ஒரு காலத்தில் உங்க அப்பா ஆறு மணி ஆனா இந்த சேரில் உட்கார்ந்து ஏதாவது கிண்டல் பண்ணி பேசிட்டே இருப்பாரு. வீட்டில் எல்லோரும் கலகலப்பா பேசிட்டு இருப்போம். ஆனா இப்போ யாரும் இல்லாமல் அமைதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா மேலிருந்து கீழே வந்து போனை சேட் செய்த படியே ஃப்ரிட்ஜில் இருந்து ஆப்பிள் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.

அப்போது கோபி இனியாவை நிறுத்தி வைத்து நானும் பாட்டியும் பேசிட்டு இருக்கிறோம். நீ எதுவுமே பேசாம போற என்று கேட்க, ஒன்றும் இல்லை டாடி நான் ப்ராஜெக்ட் செய்யணும் அதற்காக பிரண்ட் கிட்ட பேசிட்டு இருக்கேன் என்று சமாளித்தபடியே மீண்டும் கிளம்புகிறார். அப்போது இனியா முகத்தை கூட பார்த்து பேசாம போனில் என்ன பண்ணிட்டு இருக்கிற என்று கேட்க அதற்கு இனியா நீங்க பேசிட்டு இருங்க டாடி எனக்கு வேலை இருக்கு என்று கிளம்பி விடுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

இதனால் கோபி ஈஸ்வரி இடம் இனியா முன்பு மாதிரி இல்லை. எப்பவும் போனில் சாட் பண்ணிட்டு இருக்குறா. யார்கிட்டேயும் பேசவும் மாட்டேங்கற என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அவளுக்கு இந்த வீட்டில் இப்போ பேசுறதுக்கு யாரும் இல்லை என்று சொல்கிறார். பிறகு பாக்யா ஏன் இப்படி இருக்கான்னு தெரியல... செழியன், எழில் விஷயத்தில் அவள் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடாது என்று சொல்ல அதற்கு கோபி அப்படி இல்லமா ரெண்டு பேருமே வளந்துட்டாங்க அவங்களுக்கு என்ன முடிவு எடுக்கணும் என்கிற உரிமை இருக்கு.

அவர்களுடைய வாழ்க்கையில் அவங்க இனி ஃப்ரீயா இருக்கட்டும். ஏதாவது பண்டிகை டைம்ல ஒன்னா சேர்ந்து கொண்டாடிகலாம் என்று சொல்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாத ஈஸ்வரி இப்போ 45ல ஓடுற மாதிரி 85 ல ஓட முடியுமா? என்னதான் பாக்கியா அவளுக்கு தைரியம் சொல்லிக்கிட்டாலும் அவளை பாத்துக்க யாராவது வேண்டாமா?

Baakiyalakshmi Serial vijay TV

இப்போ என்னை பார்க்க நீயும் பாக்கியாவும் இருக்கிறீங்க. அதுபோல அவளுக்குனு யாரும் வேண்டாமா என்று கேட்க, அதற்கு கோபி எனக்கு இதே பயம் இருக்குமா இன்னும் கொஞ்ச நாளில் நானும் தனி மரமாக நிற்க்க போறேன். பாக்யாவுக்கு இருக்கிற தைரியம் கூட எனக்கு கிடையாது எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு மீண்டும் கல்யாணம்! ஈஸ்வரி எடுத்த முடிவு.. ஆனால் எழில் சொன்ன எதிர்பாராத பதில்
அந்த நேரத்தில் பாக்கியா வீட்டிற்கு உறவினர்கள் வருகிறார்கள். அவர்கள் கோபி இந்த வீட்டில் இருப்பது பற்றியும், செழியன் எழில் இருவரும் வீட்டை விட்டு தனி குடித்தனம் போய்விட்டார்களா என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி கோபியும் பாக்கியாவும் ஒன்றாகத்தான் இப்போ வாழறாங்க என்று சொல்லி விடுகிறார்.

Top 10 Tamil Serials: முதல் இடத்தை தவறவிட்ட சிங்க பெண்ணே.. மேலே வந்த எதிர்பாராத சீரியல்
பிறகு பாக்கியா கோபப்படுவதை பார்த்து அவர்களை சீக்கிரமாக வீட்டில் இருந்து கிளப்புகிறார். அவர்கள் போனதும் பாக்கியா சண்டை போடுகிறார். ஆனால் ஈஸ்வரி நான் அப்படி சொன்ன காரணம் இனியா கல்யாணம் ஆகும் போகும் போது நீயும் கோபியும் பிரிந்திருக்கிறது தெரிஞ்சா நல்லா இருக்காது அதனால் தான் இப்படி சொன்னேன் என்று சமாளிக்கிறார்.

அதை ஏற்றுக் கொள்ளாத பாக்கியா கோபி இந்த வீட்டில் இருப்பதால்தான் உங்க அம்மா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என்று திட்டி விடுகிறார். இதைக் கேட்டு கோபி பீல் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
English summary
baakiyalakshmi serial episode (பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 21ஆம் தேதி எபிசோட்): Bhagya is angry at Pakiakshmi Serial, which is aired on Vijay TV, on February 21, 2025 in the episode of Devi. At the same time, Kobe Peel listens to the word Bhagya.
Read Entire Article