பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்கு செருப்படி கொடுத்த பாக்யா.. கோபி சொன்ன சரியான விஷயம்

2 days ago
ARTICLE AD BOX

பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்கு செருப்படி கொடுத்த பாக்யா.. கோபி சொன்ன சரியான விஷயம்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் எபிசோடின் ப்ரேமோ வெளியாகி இருக்கிறது. பாக்கியாவும் கோபியும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று ஈஸ்வரி சொன்ன வார்த்தைய கேட்டு பாக்கியா எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கிறார்.

பாக்யலட்சுமி சீரியலில் சில வாரங்களாகவே கதையில் சுவாரசியமாகவும் அதிரடியான பல திருப்பங்களும் வந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் இந்த சீரியலில் வந்த கதையே ரிப்பீட்டு மோடில் வந்து கொண்டு இருந்தது. இதனால் அதிகமாக நெகட்டிவ் உருவாகி இருந்தது. இதனால் திடீரென்று இந்த சீரியலில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

Baakiyalakshmi Serial vijay TV

அதில் செழியன் ஜெனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. எழில் படவேலை முடிவடைந்து இருக்கிறது. இதுபோல பாக்யாவும் இரண்டாவது ரெஸ்டாரண்ட் திறந்திருக்கிறார். ராதிகாவுக்கும் கோபிக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது. இப்படி பல மாற்றங்கள் நடந்திருந்தாலும் ஈஸ்வரி மட்டும் பாக்கியாவிற்கும் கோபிக்கும் மீண்டும் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று வழக்கம்போல சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இப்போது அதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார். நேற்றைய எபிசோடில் கோபியிடம் பாக்யாவை மீண்டும் கல்யாணம் செய்து வாழ சம்மதமா என்று கேட்க, கோபி எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். அதனால் நீ பாக்யாவுடன் வாழ்வதற்கு சம்மதம் சொல்லிட்டா என்று ஈஸ்வரியே சொல்லி இருந்தார். அதுபோல எழில் மற்றும் செழியனிடமும் இது பற்றி பேசியிருந்தார்.

Baakiyalakshmi Serial vijay TV

அதற்கு செழியன் அம்மா அப்பா இருவரும் சம்மதம் சொன்னால் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லி இருந்தார். ஆனால் அம்மாவுக்கு ஒரு வாழ்க்கை துணை தேவை என்றால் நான் அவங்க சொல்லுறவரை கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனால் இவரோடு மீண்டும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் பாக்கியாவின் பிறந்த நாளை உறவினர்கள் முன்பு குடும்பத்தினர் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அப்போது பாக்கியா பற்றி ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கையில் உங்க எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன் இனி பாக்யாவும் கோபியும் ஒன்றாக வாழப் போகிறார்கள் என்று சொன்னதும் இதை சற்றும் எதிர்பார்க்காத பாக்கியா நீங்க என்னதான் சொன்னாலும் உங்க முடிவுக்கு நான் கட்டுப்பட மாட்டேன்.

Baakiyalakshmi Serial vijay TV

உங்க பையனோட என்னால மீண்டும் வாழ முடியாது. பிரிந்தது பிரிஞ்சது தான் என்று சொல்ல ஈஸ்வரி அங்கிருந்து கோபமாக எழுந்து போகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் கோபி பாக்யாவிடம் உன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் எல்லாரும் முன்பும் அம்மா பேசுனது தப்புதான். நான் அவங்களுக்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கிறார். ஆனால் பாக்கியா கோபி சொன்னதுக்கு சமாதானம் ஆகாமல் இருக்கிறார்.

More From
Prev
Next
English summary
baakiyalakshmi serial episode (பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 22ஆம் தேதி எபிசோட்): Promo will be released next week at Bhagiyalakshmi Serial, which is aired on Vijay TV. Pakia and Gopi have said that Ishwari's word that he should live together again.
Read Entire Article