ARTICLE AD BOX
பலுச்சிஸ்தான் மாநிலத்தின் நவுஷ்கி என்ற பகுதியில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு பலுச்சிஸ்தான் மாநில முதலமைச்சர் சர்பிராஸ் புக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் வந்த ஒரு பேருந்தின் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட மற்றொரு பேருந்து மோதி வெடித்ததாகவும் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மற்றொரு பேருந்து மீது கையெறி குண்டு வீசப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே இத்தாக்குதலுக்கு பலுச்சிஸ்தான் விடுதலைப்படை பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் 90க்கு மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பலுச்சிஸ்தான் விடுதலைப்படையினர் ஓடும் ரயிலுடன் ராணுவத்தினரை கடத்தியிருந்தனர். இதில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகள் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், ரயிலில் இருந்த 214 ராணுவத்தினரையும் கொன்றுவிட்டதாக பலுச் விடுதலை படையினர் தெரிவித்திருந்தனர். பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானை பிரித்து தனி நாடாக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை போராடி வருகிறது.