பாக்.கில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

8 hours ago
ARTICLE AD BOX

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அசாம் நசீர் தரார் நேற்று முன்தினம் மின்னணு குற்றத் தடுப்பு சட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலமாக சமூக ஊடகங்களில் சட்டவிரோத மற்றும் புண்படுத்தும் உள்ளடக்கத்தை தடுப்பதற்கு உத்தரவிடவும், தனிநபர்கள் மற்றும் மற்றும் அமைப்புக்களை சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்யவும் அதிகாரம் கொண்ட நிறுவனத்தை உருவாக்கப்படும் . சமூக ஊடக தளங்கள் புதிய சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் சட்டத்தை பின்பற்றத்தவறுபவர்கள் தற்காலிக அல்லது நிரந்தர தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இதுமட்டுமின்றி தவறான தகவல்களை பரப்பும் பயனர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் உமர் அயூப் கான் கூறுகையில், ‘‘இந்த மசோதா உரிமைகளுக்காக வாதிடும் குரல்களை அடக்குவதற்கான முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.

The post பாக்.கில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article