ARTICLE AD BOX
இஸ்லாமாபாத்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிபி) ரூ.869 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை பிசிபி சமீபத்தில் நடத்தியது. இந்தியா பங்கேற்ற போட்டிகள் துபாயில் நடந்தன. பாகிஸ்தானில், அந்நாட்டு அணி, தான் பங்கேற்ற போட்டியில் தோல்வியை தழுவியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. துபாயில் இந்தியாவுடனான போட்டியிலும் பாக். தோற்றது.
இரண்டு போட்டிகளில் பாக். அணி தோற்றதால், பாக்.கில் நடந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஸ்டேடியங்கள் கட்டுமான செலவு, டிக்கெட் வசூல் மந்தம் போன்ற காரணங்களால் பிசிபிக்கு ரூ. 869 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு தரப்படும் சம்பளத்தை கணிசமாக குறைக்கவும், அவர்கள் தங்க, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளை தவிர்க்கவும் பிசிபி முடிவு செய்துள்ளது.
The post பாக். கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.869 கோடி இழப்பு appeared first on Dinakaran.