பாகிஸ்தான் வாரியத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம்

15 hours ago
ARTICLE AD BOX

Published : 18 Mar 2025 07:56 AM
Last Updated : 18 Mar 2025 07:56 AM

பாகிஸ்தான் வாரியத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம்

<?php // } ?>

புதுடெல்லி: ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் பாகிஸ்​தானில் நடை​பெற்​றது. இந்த தொடரை நடத்​து​வதற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் லாகூர், கராச்​சி, ராவல்​பிண்டி ஆகிய 3 மைதானங்​களின் சீரமைப்பு பணிக்​காக இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.504 கோடியை செல​விட்​டிருந்​தது. இது ஏற்​கெனவே மதிப்​பிட்ட தொகை​யை​விட 50 சதவீதம் அதி​கரித்​திருந்​தது.

தொடர்ந்து போட்​டிகளை நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​களுக்​கான என ஒட்​டுமொத்​த​மாக ரூ.868 கோடியை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் முதலீடு செய்​திருந்​தது. ஆனால் இது​வரை பாகிஸ்​தான் போட்​டி​யில் பங்​கேற்​றதற்கு கட்​ட​ண​மாக ரூ.52 கோடி மட்​டுமே திரும்பி வந்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது. டிக்​கெட் விற்​பனை, ஸ்பான்​சர்​கள் வாயி​லாக​வும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு பெரிய அளவில் வரு​மானம் கிடைக்​க​வில்​லை. ஒட்​டுமொத்​த​மாக ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி தொடரை நடத்​தி​ய​தில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் ரூ.738 கோடி நஷ்டம் அடைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதன் காரண​மாக உள்​ளூர் போட்​டிகளில் விளை​யாடும் வீரர்​களுக்​கான ஊதி​யத்தை 90 சதவீதம் குறைத்​துள்​ளது பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம். மேலும் தங்​குமிடம், பயணக்​கட்​ட​ணம் ஆகிய​வற்​றில் கெடு​பிடிகளை காட்டி வரு​கிறது. முன்​னர் 5 நட்​சத்​திர ஓட்​டல்​களில் தங்​கவைக்​கப்​பட்ட வீரர்​கள் தற்​போது சாதாரண வசதி கொண்ட ஓட்​டல்​களில் தங்​கி​யுள்​ளனர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article