ARTICLE AD BOX
'ஜீட்டோ பாகிஸ்தான்' என்ற தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவுடன் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவி சனா ஜாவேத் பங்கேற்றார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், சனா அவரிடம், “யாரோ உங்களை காயப்படுத்தியது போல் பேசுகிறீர்கள்” என வினவினார். அதற்கு சர்ஃபராஸ், "நான் விளையாட வேண்டிய இடத்தில் விளையாடினேன்" எனப் பதிலளித்தார். இதற்கு மீண்டும் பதிலளித்த சனா, “நான் என் கணவருடன் எப்படி வேண்டுமானாலும் விளையாட முடியும்" எனத் தெரிவித்தார். அவருடைய இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இணையவாசிகள் அவருக்கு எதிராகப் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சனாவும் மாலிக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். மாலிக், முன்பு முன்னாள் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை மணந்து, பின்னர் அவரை விவாகரத்து செய்திருந்தார். அதுபோல், சனாவும் தனது முன்னாள் கணவர் உமர் ஜஸ்வாலிடம் இருந்து விவாகரத்து பெற்றததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷோயப் மாலிக்கும் சனா ஜாவேத்தும் தொடர்ச்சியாக டிவி நிகழ்ச்சியில் சந்தித்ததன் காரணமாக, அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.