பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?… வெற்றியின் ரகசியத்தை கூறிய நியூசிலாந்து கேப்டன்…!!!

4 days ago
ARTICLE AD BOX

9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ள நிலையில் மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் நேற்று கராச்சியில் அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும்  மோதியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் வெற்றிக்கு பிறகு பேட்டி அளித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், நாங்கள் வெற்றி பெற்ற விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்திருந்தனர். கடைசி நேரத்தில் களம் இறங்கிய பிலிப்ஸ் அதிரடியாக விளையாடினார். நாங்கள் 260 ரன்களை சுற்றி இலக்கு நிர்ணயிப்போம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் டெத் ஓவர்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் வந்தது. அவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்த பிறகு முதல் 10 ஓவர்கள் பவுலிங் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வேக பந்துவீச்சாளர்கள் ஷார்ட் லென்த்திலும் ஸ்பின்னர்கள் மெதுவாகவும் பௌலிங் செய்தால் இந்த பிட்சில் நன்றாக எடுபடும். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி பவுலிங்கில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலே வெற்றி பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.

Read Entire Article