ARTICLE AD BOX

கர்நாடக மாநிலம் பிடதி என்ற பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் உள்ள கழிவறையின் கதவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஒரு வாசகம் கன்னட மொழியில் மர்ம நபர்களால் எழுதப்பட்டிருந்தது. அதோடு கன்னட மொழியை பற்றி தரக்குறைவாகவும் எழுதியிருந்தது.
இதனை மறுநாள் காலை தொழிற்சாலை ஊழியர்கள் பார்த்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது . இதைத் தொடர்ந்து கன்னட மொழியை இழிவாக எழுதியதன் காரணமாகவும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டித்து கன்னட அமைப்பினர் அந்த தொழிற்சாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு இதை எழுதியவர்கள் மீது தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இவர்களின் வலியுறுத்துதல் காரணமாக தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.