பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்! -90 வீரர்கள் பலி?

17 hours ago
ARTICLE AD BOX

இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாஷ்கி பகுதியில் ஒரு காரில் வெடி பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்த பலோச் இயக்க பயங்கரவாதிகள், அவ்வழியாக ராணுவ பேருந்துகளில் சென்று கொண்டிருந்த துணை ராணுவ படையினரைக் குரிவைத்து அந்த காரை பேருந்துகளின் மீது மோதி வெடிக்கச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 90 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக பலோச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலோச் விடுதலைப் படை(பி.எல்.ஏ) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இதே பயங்கரவாத இயக்கம், கடந்த செவ்வாய்க்கிழமை 450 பயணிகளுடன் சென்ற ரயிலை கடத்திய நிலையில், அதனைத்தொடர்ந்து ராணுவத்தினர் அந்த பயங்கரவாதிகளைக் கொன்று ரயில் பயணிகளை மீட்ட சம்பவம் நடந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் பலோச் பிரிவினைவாத பயங்கரவாதிகள் தீவிர தாக்குதல்களை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article