பழைய சோறு குறித்த அறிவியல் பூர்வ ரகசியம் வெளியானது!

3 hours ago
ARTICLE AD BOX

“பழைய சாதம்”, “பழைய சோறு”, “நீராகாரம்” – இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இந்த உணவு நம்மில் பலருக்கு ஏதோ ஒரு வகையில் பரிச்சயமானதுதான். பீட்சா, பர்கர் என மேற்கத்திய உணவுகளில் மூழ்கி கிடக்கும் இளைய தலைமுறைக்கு இதன் அருமை தெரியாமல் இருக்கலாம். ஆனால், நம் முன்னோர்கள் அன்றாடம் விரும்பி உண்ட, உடல் நலத்தைப் பாதுகாத்த உணவு இது.

காலையில் சமைத்த சாதம் மீந்துவிட்டால் போதும், அதில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிடுவார்கள். அடுத்த நாள் அதுவே பழைய சாதமாக மாறுகிறது. இதை செய்வதற்கு பெரிய சமையல் நிபுணத்துவம் எதுவும் தேவையில்லை. ஆனால், இந்த எளிய உணவு தரும் நன்மைகள் ஏராளம். குறிப்பாக, பழைய சோற்றில் ஊறிய நீர்தான் உண்மையான ஹீரோ.

கிராமங்களில் வெயிலில் அலைந்து திரிந்து களைத்து வருபவர்கள், “கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி” என்று உரிமையோடு கேட்பார்களே, அதுதான் இந்த நீராகாரம். உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதோடு, நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க தேவையான சக்தியையும் இந்த நீராகாரம் தருகிறது.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு காபி, டீ போன்ற பானங்கள் நம் வாழ்வில் நுழைந்ததும், நீராகாரம் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போனது. மற்ற பானங்களைப் போல நீராகாரத்தை பாட்டில்களில் அடைத்து எடுத்து செல்வதும் கடினம். சாதம் கலந்து இருப்பதால் புட்டிகள் ஏற்றதாக இருக்காது. இதுவும் நாம் நீராகாரத்தை மறந்ததற்கு ஒரு காரணம். ஆனால் நீராகாரத்திற்கு குளிர்சாதனப் பெட்டியும் தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
கடல் மண் சுமப்பதே பரிகாரம்! எங்கு தெரியுமா?
பழைய சோறு

மண்பானையில் ஊற்றி வைத்தாலே போதும், காலை நேரத்தில் குளு குளு நீராகாரம் தயார். தமிழகம் மட்டுமல்ல, கேரளாவிலும் நீராகாரம் பாரம்பர்ய உணவு என்பது குறிப்பிடத்தக்கது. நீராகாரத்திற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் இருந்தால் போதும், சுவைக்கு கேட்கவே வேண்டாம்.

பழைய சோற்றில் லேசான புளிப்பு சுவை ஏற்படுவதற்கு காரணம், சாதத்தில் உருவாகும் லாக்டிக் அமில பாக்டீரியா (Lactic Acid Bacteria). இந்த பாக்டீரியா புளிப்பு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல், புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களையும் அபரிமிதமாக அதிகரிக்கிறது. உதாரணமாக, சாதத்தில் 3.4mg இரும்புச்சத்து இருந்தால், பழைய சாதமாக மாறும் போது அது 73.91mg ஆக அதிகரிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எனவே, காலை உணவுக்கு பழைய சோறு ஒரு சத்தான மற்றும் சிறந்த தேர்வு.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க ஜனாதிபதியாகவே இருந்தாலும் இவருக்கும் உண்டு சில கட்டுப்பாடுகள்!
பழைய சோறு

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பழைய சோற்றின் பலன்களை பட்டியலிட்டுள்ளது. நீராகாரம் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்தது, உடல் சூட்டை குறைக்கும், நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும், உடல் சோர்வை நீக்கும், ரத்த அழுத்தத்தை சீராக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைக்கும், ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகளுக்கு நல்லது, வயிற்றுப் புண்களை ஆற்றும், புதிய நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும், சருமத்தை பளபளப்பாக வைத்து இளமை தோற்றத்தை தக்க வைக்கும்.

எனவே, பழைய சோறு இருக்கும் வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்கும். நம் பாரம்பர்யம் ஆரோக்கியத்தை எவ்வளவு போற்றி பாதுகாத்தது என்பதற்கு பழைய சோறு ஒரு சிறந்த உதாரணம். பாரம்பரிய உணவுகளை மதிப்போம்… ஆரோக்கியமாக வாழ்வோம்…

Read Entire Article