ARTICLE AD BOX
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த வளந்தாயமரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் அருகே உள்ள திறந்தவெளியில் இருந்த காய்ந்த செடி, கொடிகள் திடீர் என தீப்பற்றி எரிந்தது. காற்று வேகமாக அடித்தால், தீயின் வேகம் எடுத்து, அந்த கட்டிடத்திற்குள் பரவியது. இதில், பழைய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்ட அறையில் தீ பற்றியதால், அப்பகுதியில் புகைமூட்டம் அதிகமானது. நேரம் செல்ல செல்ல தீ அதிகளவு எரிந்ததால், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலறிந்த தீயணைப்பு குழுவினர், நிலைய பொறுப்பு அலுவலர் பாலாஜி தலமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து, கட்டிடத்தில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்குள்ள அறையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு appeared first on Dinakaran.