ARTICLE AD BOX
பழம் பெரும் நடிகை புஷ்பலதா திடீர் மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி!
சென்னை: பழம் பெரும் நடிகையும் எம்.வி.ஆர் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா என்று காலமானார். அவருக்கு வயது 87. இவரது மரணம் திரையுலகினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலத் திரைப்பிரபலங்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை புஷ்பலதா கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து. சாரதா , பார் மகளே பார் , நானும் ஒரு பெண் , யாருக்கு சொந்தம் , தாயே உனக்காக , கற்பூரம் , ஜீவனாம்சம் , தரிசனம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார் நடிகை புஷ்பலதா. இவர், தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். மேலும், எம்.ஜி.ஆர், சிவாசி, ஜெமினி கணேசன், முத்துராமன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை என்ற படத்தில் ரஜினிக்கு மாமியார் ரோலில் வில்லியாக நடித்திருந்தார்.
பழம்பெரும் நடிகை புஷ்பலதா: இவர், நானும் ஒரு பெண் திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஏவிஎம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர், நானும் ஒரு பெண் திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அவர்களில் ஒருவர் மகாலட்சுமி , அவர் சில படங்களில் நடித்துள்ளார்.
திடீர் மரணம்: இந்நிலையில் 87 வயதான புஷ்பலதா சற்று முன் உயிரிழந்தள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது மறைவுக்கு இவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.