பழச்சாறு ஆரோக்கியமானது... ஆனால் இவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்...

7 hours ago
ARTICLE AD BOX

பொதுவாகவே பழச்சாறுகளை பருகுவது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும். தினமும் பழச்சாறுகள் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் செயலாக இருக்கும். அதிலும் குறிப்பிட்ட சிலப் பழச்சாறுகள் உடலுக்கு அதிக நன்மை அளிப்பவையாக உள்ளன. ஆனாலும் இந்த அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பழச்சாறுகளை சிலர் தவிர்ப்பது நல்லது. காரணம் இந்த குறிப்பிட்ட பழச்சாறுகளை ஆரோக்கிய நன்மைக்காக தினமும் சிலர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பலர் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான பழச்சாறுகளை குடிக்கிறார்கள். பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் கேரட் ஆகிய பழச்சாறுகள் உடலுக்கு அதிக நன்மை தருபவையாக உள்ளது. இவற்றில் அதிகளவில் இரும்புச்சத்து, பல வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பொதுவாக இந்த பழச்சாறுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த சோகை நோயை குணப்படுத்துகிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. சரும ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. அதிக அடை கொண்டவர்கள் மற்றும் விரைவாக எடை இழக்க விரும்புபவர்களும் இந்த சாற்றை உட்கொள்கிறார்கள்.

பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் கேரட் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளை சிலர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த பழச்சாறு ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும், அதே வேளையில் சில ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கு இது ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்க கூடும். இது அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். யாரெல்லாம் இந்த பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஒவ்வாமை இருப்பவர்கள்:

பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் கேரட் ஒவ்வாமை இருப்பவர்கள் இந்தப் பழச்சாற்றினை குடிக்கக் கூடாது. இந்த சாற்றை குடிப்பதால் ஒவ்வாமை அதிகரிக்கும். இதேபோல், சிலர் ஒவ்வாமையால் அவதிப்பட்டால், பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் கேரட் சாறு ஆகியவற்றின் கலவை உடலால் விரைவாக உறிஞ்சப்படுவதில்லை, இது தோல் அரிப்பு, வீக்கம் அல்லது வாந்தி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:

பீட்ரூட், கேரட் மற்றும் நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடிக்கக் கூடாது. இந்த பழச்சாறுகளை அவர்கள் குடித்தால் அவர்களை ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து நிலைமை மோசமாக கூடும். அதனால் அவர்களுக்கு திடீரென்று தலைச்சுற்றல், தலைவலி, மயக்கமும் ஏற்படலாம்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்:

சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் நோய் இருப்பவர்கள் பீட்ரூட் சாறு குடிப்பது அவர்களின் நோயை மேலும் மோசமாக்கும். குறிப்பாக, சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் கேரட் சாறு குடிப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள ஆக்சலேட் சிறுநீரகக் கற்களை மேலும் வலிமை ஆக்க உதவும்.

கர்ப்பிணிப் பெண்கள்:

கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் கொண்டிருப்பார்கள், சிலருக்கு தற்காலிக சர்க்கரை நோயும் அப்போது வந்திருக்கும். கேரட், பீட்ரூட் சர்க்கரை அளவை சிறிது உயர்த்த கூடியது. பீட்ரூட் இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்க கூடியது. நெல்லிக்காய், இரத்த சர்க்கரையும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்பு கொண்டது. அதனால் கேரட், பீட்ரூட் மற்றும் நெல்லிக்காய் சாறுகளைத் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
பல(ன்)ம் தரும் 10 ஜூஸ் வகைகள்!
carrot beetroot amla juice
Read Entire Article