ARTICLE AD BOX
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே, கர்லம்பாக்கம் கிராமத்தில் ஐயப்பன் கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை போடப்பட்டது. பின்னர், இதுவரை சாலை செப்பனிடப்படாததால், சிமெண்ட் சாலை ஆங்காகே துண்டித்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது, பொதுமக்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணர் பஜனை கோயில் அருகில் கழிவுநீர் கால்வாய் மேல் தளம் உடைந்து 5 மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக சென்றால், உடைந்துள்ள குழியில் சிக்கி பலத்த காயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தெரு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அடைப்பு தளத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பள்ளிப்பட்டு அருகே குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.