ARTICLE AD BOX

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அன்விதா ஷர்மா (29). இவர் அப்பகுதியில் உள்ள கே.வி.எஸ் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவர் கௌஷிக் அப்பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் அன்விதா ஷர்மா தனது பெற்றோருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதிய குறுஞ்செய்தியில், “என் கணவர் என்னை மணக்கவில்லை, என் வேலையையே மணந்தார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்”. ஆனால் ஒருபோதும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனது கணவருக்கு அவரது அம்மா மீது மட்டுமே கவனம் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர் மற்றும் மாமியார் போல் என்னை யாரும் இவ்வளவு கேலி செய்திருக்க யாராலும் முடியாது.
எல்லாவற்றிலும் தவறுகளை கண்டுபிடித்துக் கொண்டே இருந்தனர். எனது கணவருக்கு என்னுடைய வங்கி கணக்குகள், காசோலை புத்தகம் மட்டுமே தேவை. தயவுசெய்து என்னுடைய குழந்தையை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அவனை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் அவனது தந்தையைப் போல வளர்வதை நான் விரும்பவில்லை”. என தனது பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்துவிட்டு செல்போனை அணைத்து வைத்துள்ளார்.
இதனை படித்த அவரது பெற்றோர்கள் உடனடியாக அவருக்கு டயல் செய்து பார்த்துள்ளனர் ஆனால் எந்தவித பதிலும் அளிக்காததால் அவரது கணவர் கௌஷிக் இடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். அவர் வீட்டிற்கு வந்தபோது கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. எனவே ஜன்னல் கம்பிகளை வெட்டி உள்ளிருந்து அன்விதாவின் உடலை மீட்டதாக இந்திராபுரம் ACP அபிஷேக் ஸ்ரீ வாஸ்தவா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அன்விதாவின் பெற்றோர் திருமணத்திற்காக கௌஷிக்கிற்கு 26 லட்சம் வரதட்சனை கொடுத்ததாகவும், மேலும் நீல நிற டிசையர் கார் வாங்கிக் கொடுத்ததாகவும், இருப்பினும் தனது மகளை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கௌஷிக்கும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் அவர் ஆசிரியராக பணி புரிந்த அவருடைய முழு சம்பளம், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு போன்றவற்றை தாங்களே அனுபவித்து வந்ததாகவும் காவல்துறையில் புகார் அளித்தார். கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று தனது மகளை கடுமையாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை குறிப்பு அனுப்பி விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அன்விதாவின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.