ARTICLE AD BOX
நாயுருவி செடி வயல்வெளிகளிலும், தரிசு நிலங்களிலும் அதிகம் காணப்படும் ஒரு தாவரமாகும். இதன் இலைகளுக்கு மேல் உள்ள முள், ஆடைகளிலும், சருமத்திலும் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்த முழு தாவரமும் மருத்துவ குணம் வாய்ந்ததாகும். இதற்கு அபமார்க்கி, நாய்குருவி, சரமஞ்சரி, சனம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களும் உண்டு.
நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும். நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கு இது கண் கண்ட மருந்து.
நாயுருவி வேர்ப் பொடியுடன் சிறிது மிளகு பொடியும் தேனும் சேர்த்துக் கொடுக்க தொடர் இருமல் நீங்கும்.
இதன் இலைகளை கசக்கி தேள் கடித்த இடத்தில் அழுத்தி பிடித்தால் விஷம் இறங்கி விடும்.
நாயுருவி இலைகளை பருப்புடன் வேகவைத்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளி பிரச்னை தீரும்.
நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.
நாயுருவி இலைகளை அதிகாலை வேளையில் பறித்து கசக்கி அதன், சாறை தேமல், பற்று, படை, சொரி, சிரங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகும்.
நாயுருவிச்செடியின் இலைகளை இடித்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.
நாயுருவி குச்சிகளை கொண்டு பல்துலக்கி வந்தால் பற்கூச்சம், வலி, வீக்கம், ரத்த கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்.
நாயுருவி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், எரிச்சல், தடை உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்கள் நாயுருவி தாவரத்தை முழுவதும் எடுத்து அரைத்து நெல்லிகாய் அளவிற்கு பாலில் கலந்து சாப்பிட்டால் 5 நாட்களில் குணமாகும்.
இது அதிக வெப்பத் தன்மை கொண்டது என்பதால், கர்ப்பிணிகள் இதை உட்கொள்வது நல்லதல்ல.