பலாக்கொட்டை மில்க் ஷேக்... சிம்பிளான, சூப்பர் ரெசிபி

3 hours ago
ARTICLE AD BOX

பலாப்பழம் மட்டும் அல்ல, அதன் கொட்டைகளும் பல சத்துக்கள் நிறைந்த இனிப்பு மற்றும் நறுமணமிக்க உணவுப் பொருள். பலர் பலாப்பழக் கொட்டை வைத்து குழம்பு, பொரியல் போன்றவை செய்வதுண்டு. ஆனால் பலாப்பழக் கொட்டையில் சுவையான, கிரீமியான, ஆரோக்கியமான மில்க் ஷேக் செய்யலாம். பலாப்பழக் கொட்டை, உடல் சூட்டை தணிக்கவும், எலும்புகளுக்கு நன்மை அளிக்கவும், செரிமானத்தைக் கட்டுப்படுத்தவும் சிறந்தது.

தேவையான பொருட்கள் :

பலாப்பழக் கொட்டை – 10
க்ரீம் பால் – 2 கப்
தேன் / சர்க்கரை / வெல்லம் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நாட்டு சக்கரை  – தேவைப்பட்டால்
பாதாம் / முந்திரி  – 5 (தேவைப்பட்டால்)
நிலக்கடலை – 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
ஐஸ்க்யூப் – தேவையான அளவு

செய்முறை :

- பலாப்பழக் கொட்டைகளை தண்ணீரில் 10-15 நிமிடம் ஊற வைத்து, மேலிருக்கும் தோலை நீக்கவும்.
- ஒரு குக்கரில் 2-3 விசில் வரும் வரை நீரில் நன்கு வேக வைக்கவும்.
- வெந்த கொட்டைகளை தண்ணீர் வடித்துவிட்டு, அதன் மேலிருக்கும் சிவப்பு தோலை நீக்கவும்.
- வெந்த கொட்டைகளை கெட்டியான பேஸ்டாக அரைத்துக் கொள்ளலாம்.
- ஒரு மிக்சியில் வெந்த பலாப்பழக் கொட்டை, பால், தேன் / சர்க்கரை / வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மேலும், பாதாம், முந்திரி, நிலக்கடலை சேர்த்து அரைக்கலாம் – இது கூடுதல் சத்து மற்றும் சுவை தரும்.
- இதில் ஐஸ்க்யூப் சேர்த்து மறுபடியும் ஒரு சுற்று மிருதுவாக அரைக்கவும்.
- உங்கள் பலாப்பழக்கொட்டை மில்க் ஷேக் தயார்!

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கணுமா? பெற்றோர்களுக்கான 5 சூப்பர் டிப்ஸ்!!

பரிமாறும் முறை :

- கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஒரு சிறிய பாதாம் தூள் / முந்திரி தூவி பரிமாறலாம்.
- அதிக குளிர்ச்சியாக வேண்டுமெனில், ஃப்ரிட்ஜில் வைத்து 30 நிமிடம் கழித்து பரிமாறலாம்.
- குழந்தைகளுக்கு இது சுவையான மற்றும் ஆரோக்கியமான பானமாகும்.

பலாப்பழக் கொட்டை மில்க் ஷேக்கின் ஆரோக்கிய நன்மைகள் :

- எளிதில் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய பானம் . எந்த செயற்கை கலப்பு சேர்க்கவில்லை.
- நரம்பு பலம் மற்றும் மூளைக்கு சத்தான உணவு . பலாப்பழக் கொட்டை ப்ரொட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்தது.
- கொலஸ்டிரால் குறைக்கும் . இதன் நேச்சுரல் ஃபைபர் உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
- வெறும் பாலை விட சிறந்த சத்துணவு. இயற்கையான இனிப்பும், பால் மற்றும் பருப்புச் சேர்க்கையுடன் இது மிகவும் ஆரோக்கியமானது.

சுவையை அதிகரிக்க :

- தேங்காய் பால் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
- இதை நெய் விட்டு வறுத்து அரைத்து மில்க் ஷேக் செய்தால், சுவையில் தனித்துவம் கிடைக்கும்.
- பாலை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால், ஐஸ்க்ரீம் போன்ற நறுமணத்துடன் கிடைக்கும்.
- வெல்லம் சேர்ப்பது சிறந்த தேர்வு . இது ஆரோக்கியத்திற்கும் நல்லது, இயற்கை இனிப்பு தரும்.

Read Entire Article