பல(ன்)ம் தரும் 10 ஜூஸ் வகைகள்!

2 days ago
ARTICLE AD BOX

னைவருக்குமே ஜூஸ் குடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதை விதவிதமாக கால நேரத்திற்கு தகுந்தார் போல் செய்து சாப்பிடும்போது ஒரு உற்சாகம் பிறக்கும். ஜூஸ் வகைகளை ஒரு உற்சாக டானிக் என்று சொன்னால் மிகையாகாது. கலக்கலான ஜூஸ் வகைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

நெல்லி ஜூஸ்:

நெல்லிக்கனி சாற்றுடன் எலுமிச்சம் பழம் சாற்றையும் சேர்த்து கலந்து பருகி வந்தால் சீதபேதியை குணப்படுத்தி விடலாம். கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும் சத்துக்கள் அனைத்தையும் இது கொடுக்கும். உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்கும். மேலும் இந்த ஜூஸ் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் நல்ல மருந்து பொருளாகவும் விளங்குகிறது. இந்த ஜூஸ் உடன் சிறிதளவு வெந்தயப்பொடி சேர்த்து காலையில் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி மட்டுப்படும்.இரும்புச்சத்து நிறைந்தது.

பப்பாளி ஜூஸ்:

பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, போலிக் ஆசிட். பொட்டாசியம். தாமிரம், பாஸ்பரஸ், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளி பழத்தில்தான் உள்ளது.100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

இதையும் படியுங்கள்:
அசத்தலான சமையல் குறிப்புகள்…இதன் சுவை அசத்துமே உங்களை!
10 types of juice

அன்னாசி ஜூஸ்:

வைட்டமின் சி மற்றும் தாது உப்புகளைக் கொண்டது இப்பழம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. கண் சம்பந்தமான நோய்களைப் போக்க, ஞாபக சக்தியை பெருக்க, மூளை கோளாறை சரிப்படுத்த, உடலில் சேரும் கழிவையும் நச்சுப் பொருட்களையும் வெளியேற்ற, குடல் புழுக்களை அகற்ற, பித்த சம்பந்தமான எல்லா நோய்களையும் போக்க இந்தப் பழ ஜூஸ் சிறந்தது. இந்த ஜூஸூடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ்:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் இது. அல்சரை குணப்படுத்தும், நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி சீராக செயல்பட வைக்கும். இந்த ஜூஸை தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் அஜீரண தொல்லையே ஏற்படாது. இதனுடன் சிறிதளவு தேனையும் சேர்த்து அருந்த வேண்டும். இந்த ஜூஸ் உடன் காய்ச்சிய பாலையும் கொஞ்சம் கலந்து சாப்பிட்டு வந்தால் உறக்கம் நன்றாக வரும். இதை குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்.

பேரீச்சை ஜூஸ்:

காசநோய் உள்ளவர்கள் இப்பழத்துடன் வெள்ளாட்டின் பாலையம் சூடாக்கி பருகி வரலாம். ரத்த அளவு அதிகரிக்க, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதி ரத்தப்போக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க ,பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு அளிக்க, மலச்சிக்கலை தீர்க்க, இரும்புச்சத்து நிறைந்த ரத்த சோகை உள்ளவர்கள் ,கர்ப்பிணிகள், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த ஜூஸ் இது. கபம் விலகுவதுடன் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

மாதுளை ஜூஸ்:

தினமும் ஒரு கப் மாதுளம் பழச்சாறு குடித்து வர ஆண்களுக்கு உயிர் சத்தைப் பெருக்கும் சுரப்பியின் அளவு அதிகரிக்கும். எலும்பு ,தசை தொடர்பான நோய்கள் குணமாகும். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கர்ப்பப்பை, சினைப்பை பிரச்சனைகள் குணமாகும் .சருமத்துக்கு நல்லது. ரத்த சோகை தீரும். இதில் கொம்மட்டி மாதுளம் பழ ஜூசை குடித்து வர மரத்துப்போன நாவை மீண்டும் உணர்வுக்கு கொண்டு வரும்.

திராட்சை ஜூஸ்:

பசும்பாலை ஓரளவு காய்ச்சி ஆறவைத்து இதனுடன் திராட்சை பழச்சாறு பாதாம் பருப்பும் முந்திரி பருப்பு இவை சேர்த்து பருகி வர நரம்பு தளர்ச்சி குணமடையும். மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதால் பெண்கள் இதை அருந்துவது சிறப்பு .காலையில் சர்க்கரை, சேர்க்காமல் இந்த ஜூசை குடித்து வர ஒற்றைத் தலைவலி ஆஸ்துமா ,நுரையீரல் நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை ஜூஸ்:

ரத்த ஓட்டத்தை சரி செய்ய, உடம்பின் பளபளப்பிற்கும், இருதயம் வலிமை பெறுவதற்கும், சிறுநீரில் உள்ள சர்க்கரையை குறைப்பதற்கும், மூட்டுவலி குணமாக, நோய் எதிர்ப்பு சக்தி பெருக இதன் ஜூஸ் பெரிதும் உதவும்.

மாம்பழ ஜூஸ்:

மாம்பழச் சாற்றுடன் காரட் சாரையும் கலந்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடை செய்யலாம். புற்று நோயையும் வரவிடாமல் செய்கிறது. சீரண சக்தியை தருகிறது. பல்வலி போன்ற உபாதைகளை குணப்படுத்துகிறது. ரத்த விருத்திக்கும், கண்பார்வைக்கும் சிறந்தது.

ஆப்பிள் ஜூஸ் :

மூளை வளர்ச்சிக்கும், மூலநோயை குணப்படுத்தவும், பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை தணிக்க செய்ய இதன் சாறு பெரிதும் உதவுகிறது.

Read Entire Article