ARTICLE AD BOX

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சியின் அவலங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வரும் துணை முதல்வரும் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி மக்களை திசை திருப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். அவர் வரும்போது எல்லாம் தமிழகத்தில் ஏதாவது பிரச்சனையை உருவாக்கி திசை திருப்பலாம் என்று நினைக்கிறார். இங்கே வந்தால் தமிழை விரும்புகிறேன் என்பார், அதுவே உத்திர பிரதேசம் போனால் இந்தியை விரும்புவேன் என்பார். இரட்டை நாக்கு கொண்டவர்கள் பேச்சுக்கெல்லாம் தமிழக மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள்.
புதிய பிரச்சினைகளை முதல்வரும் துணை முதல்வரும் எப்படி உருவாக்குகிறார்கள் என்றால், மக்கள் பயனடைகின்ற நலத்திட்டங்களுக்காக புதிய புதிய பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எப்போதும் அதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். எல்கேஜி யுகேஜி மாணவர்கள் போல மத்திய மற்றும் மாநில அரசுகள் சண்டை போட்டுக் கொள்வதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறியிருந்தார். பல PHD முடித்த கட்சி இந்த திமுக கட்சி. எங்களை சிறுபிள்ளைத்தனமாக பேச வேண்டாம் என்று சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.