ARTICLE AD BOX
மாணவர்கள் செலுத்திய உழைப்பை, வருடம் முழுவதும் காட்டும் கண்ணாடி விடைத்தாள்தான்.
வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அளவுகோல் தேர்வின் முடிவுதான்.
கச்சிதமாக தேர்வு எழுதுவது எப்படி? பார்க்கலாம்.
தேர்வுக்கு முதல் நாள் இரவு புதிதாக எதையும் படிக்க கூடாது. இரவு நீண்ட நேரம் கண் விழித்து படிப்பதும் கூடாது. இரவில் நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு அமைதியான, மனநிலையில் செல்வதுதான் அதிக மதிப்பெண் பெற உதவும்.
காலையில் சத்தான உணவு, பால் குடித்து சென்றால் தேர்வு எழுத புத்துணர்வு தரும்.
காலையில் அவசரமாக எல்லாவற்றையும் ரிவிசன் செய்யக்கூடாது. ஏற்கனவே எடுத்த குறிப்புகளை மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பது மட்டும் போதும். ஒரு மணி நேரம் முன்னதாகவே படிப்பதை நிறுத்தி விட வேண்டும்.
அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்துக்கு சென்று விடுவது நல்லது. கடைசி நேரத்தில் கிளம்பி போக்குவரத்து நெரிசலை சந்தித்து திடீர் என ஏற்படும் தடங்கல்கள், எரிச்சல் அந்த டென்ஷனில் படித்த பாடங்கள் மறந்து போகும்.
வெகு சீக்கிரமே போய் காத்திருக்க, அதனால் ஏற்படும் சோர்வில் தேர்வை ஒழுங்காக எழுத முடியாமல் போய்விடும்.
தேர்வு அறையிலும் பல மாணவர்கள் பாடத்தில் உள்ள குறிப்புகளை உரையாடி விவாதித்து குழப்பிக் கொள்வார்கள். அதை எல்லாம் காதில் வாங்காதீர்கள். கடைசி நேரம் உரையாடல்கள் உங்களை குழப்பவே செய்யும்.
பரிட்சையில் உங்கள் இடத்தல் அமர்ந்ததும், கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். 'என்னால் மிக நன்றாக தேர்வு எழுத முடியும். முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆண்டு முழுக்க பல முறை படித்திருக்கிறேன்' என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். நன்றாக எழுத வரும்.
ஏற்கனவே எழுதி பழகிய பேனாவை தேர்வுக்கு எடுத்துச் செல்லுங்கள். பென்சில், ரப்பர், ஸ்கெட்ச் பென்கள், படம் வரைவதற்கான உபகரணங்கள் என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமானது ஹால் டிக்கெட் அதை மறக்காமல் எடுத்து வைக்கவும்.
விடைத்தாளில் உங்கள் பதிவு எண்களை சரியாக எழுத மறக்காதீர்கள்.
உங்கள் பதிலளிக்கும் கேள்விகளை பென்சிலால் டிக் செய்து கொள்ளவும். சாய்ஸில் விட்டது போக போதுமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறோமா? என்பதை உறுதி செய்ய உதவும்.
விடைகளை விரிவாக எழுதுங்கள். அதே நேரத்தில் தேவையான பதிலை மட்டுமே எழுதுங்கள். உங்களுக்கு தெரிந்ததெல்லாம் எழுத வேண்டும் என நினைக்காதீர்கள்.
வேகமாக எழுதினாலும் தெளிவாக எழுதுங்கள். விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு அப்பொழுதுதான் உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும்.
பதில் தெரிந்த பகுதிகளுக்கு முதலில் விடையளியுங்கள். உதாரணமாக மூன்று மதிப்பெண்கள் 5 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்களில் சாய்ஸில் விட்டது போக மீதியைத் தேர்ந்தெடுத்து எழுதலாம். இதில் தெரிந்த பதில்களை வேகமாக எழுதிவிடலாம். இதில் ஒரே ஒரு கேள்வி விடை தெரியாவிட்டாலும் அந்த டென்ஷனை மற்ற பகுதிகளுக்கு சரியாக விடை அளிக்க முடியாமல் போகும்.
முடிந்தவரை அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத பழகுங்கள்.
நீங்கள் தெளிவாக படித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை இது வெளிப்படுத்தும் தேர்வு முழுவதும் ஒரே மையில் எழுதுங்கள். அதே மாதிரி 2 பேனாக்கள் எழுதுபவையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
கடைசியில் சில நிமிடங்கள் சரிபார்க்க ஒதுக்குங்கள். எல்லா பிரிவுகளிலும் சாய்சில் விட்டது போக போதுமான கேள்விகளுக்கு பதில்களை எழுதி இருக்கிறோமா? என சரி பாருங்கள்.
தேர்வு முடிந்து விடைத்தாளை கொடுத்துவிட்டு வெளியே வந்த பின், எந்த ஒரு பதிலையும் சரி பார்க்காதீர்கள். ஒரு தேர்வு முடிந்தவுடன் இப்படி பார்க்கும்போது ஒருவேளை ஏதேனும் தவறாக எழுதி இருந்தால் அது ஏமாற்றத்தை அளிக்கும். இதனால் அடுத்த தேர்வுக்கான படிப்பு பாதிக்கப்படும்.
தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் மதிய உணவுக்கு பின் ஒரு மணி நேரம் நன்றாக தூங்கி எழுங்கள். இதனால் தேர்வில் எழுதிய பதில்கள் உங்கள் நினைவில் இருந்து பின் தள்ளப்படும். தூங்கி எழுந்தவுடன் அடுத்து தெரிவிக்காக புத்துணர்வுடன் படிக்கத் தொடங்கலாம்.
மாணவர்கள் இந்த டிப்ஸை பயன்படுத்தி தேர்வு நன்றாக எழுதி மதிப்பெண்கள் வாங்க வாழ்த்துக்கள்