பராசக்திக்கு பின் அந்த நடிகருடன் இணையும் சுதா கொங்கரா! - அப்ப சூர்யாவுக்கு அல்வாதானா!..

3 hours ago
ARTICLE AD BOX

Sudha Kongara: மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டவர் சுதா கொங்கரா. ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியிருந்தாலும் இறுதிச்சுற்று படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். எல்லோரும் சாக்லேட் பாயாக பார்த்த மாதவனை இந்த படத்தில் வேறு மாதிரி நடிக்க வைத்திருந்தார் சுதா கொங்கரா.

சூரரைப்போற்று: அந்த படத்திற்கு பின் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். விமானி ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த உண்மை கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு ரூபாயின் விமான சேவையை கொடுக்க ஆசைப்பட்ட கோபிநாத்தின் கதாபாத்திரத்தில் சூர்யா சிறப்பாகவே நடித்திருந்தார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் ரசிகர்களும் வரவேற்பை பெற்றது. இந்த படம் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்தது. அதன்பின் இந்த படம் ஹிந்தியிலும் உருவாகியது. சூரரை போற்று படத்திற்கு பின் சுதா கொங்கராவும், சூர்யாவும் புறநானூறு என்கிற படத்தில் மீண்டும் இணைவராக அறிவிப்பு வெளியாகி போஸ்டரும் வெளியிடப்பட்டது.


புறநானூறு: 1965ம் வருடம் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை இது. அப்போது பாலிவுட்டில் படங்களை தயாரிப்பது, நடிப்பது போன்ற விஷயங்களில் சூர்யா ஆர்வம் காட்டி வந்ததால் கதையில் சில மாற்றங்களை அவர் செய்ய சொல்ல சுதா கொங்கரா அதை மறுக்க சூர்யா அந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

பராசக்தி: அதன்பின் இந்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க முன்வந்தார். அதோடு, ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்போடு வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் பராசக்தி என்கிற தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

புறநானூறு நிறுத்தப்பட்டதால் பராசக்தி படத்திற்கு பின் சூர்யாவுடன் சுதாகொங்கரா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பராசக்தி படத்தை முடித்த பின் சுதா கொங்கரா துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது சுதாகொங்கராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Read Entire Article