ARTICLE AD BOX
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் "பராசக்தி" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடிப்பதாக கூறப்படுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நாயகனாகவும், ரவி மோகன் வில்லனாகவும் நடிக்கும் "பராசக்தி" திரைப்படத்தில், அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீலிலா இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் சுமார் 200 கோடியுக்கும் மேல் என்பதால், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் வெளியான பிறகு கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சில முன்னணி நடிகர்கள் சம்பளத்துக்கு பதிலாக லாபத்தில் பங்கு என ஒப்பந்தம் செய்து நடித்துள்ளனர். அந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்ததை பார்த்து கோலிவுட் திரை உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.