ARTICLE AD BOX
பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சயித் அலிகானை குடும்பத்தினர் மீது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது உடலில் 6 இடங்களில் ஏற்பட்ட கத்தி குத்து காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார். இந்த விவாகரத்தில் தச்சு தொழிலாளி ஒருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்த நிலையில் குற்றவாளியை பிடிக்க 30 தனி படைகள் காவல்துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சயித் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் பந்த்ரா ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி-யில் கொள்ளையனின் காட்சிகள் பதிவாகியிருக்கிறது என்றும் தற்போது அது காவல்துறையினர் சார்பில் வெளியிட பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.