ARTICLE AD BOX
பரணி கழுத்துல நீ கட்டுன தாலியை நீயே கழட்டிடு.. உடைந்து போன சண்முகம்.. அண்ணா சீரியல்!
சென்னை: பரணி மட்டும் வெங்கடேசனை வீட்டுக்கு அழைத்து வரவில்லை என்றால், எனக்கு இந்த அவமானமே வந்து இருக்காது. என்று ரத்னா இப்படி சொல்வதை கேட்ட சண்முகமும், அவ சொல்றது சரி தானே.. என் தங்கச்சி இப்படி அவமானப்பட்டு நிற்க நீ தான் காரணம், நீ தானே வெங்கடேஷை இந்த வீட்டிற்குள் கூட்டிட்டு வந்த என்று சொல்ல பரணி வருத்தப்படுகிறாள் அழுதுக்கொண்டே படுத்து இருக்கிறாள்.அப்போது சண்முகம், வந்து வெங்கடேஷை இந்த வீட்டிற்குள் கூட்டிட்டு வர வேண்டாம்னு எல்லோரும் சொல்லியும் நீ தானே கூட்டிட்டு வந்த என்று சொல்ல பரணி, முத்துபாண்டியையும் நான் தான் கூட்டிட்டு வந்தேன், இன்னைக்கு அவனும் இசக்கியும் நல்லா வாழலையா? அதே மாதிரி ரத்னா வாழ்க்கையும் நல்லா இருக்கனும்னு தானே அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்.
ஆனால் நீ எதையும் புரிஞ்சிக்காம எப்பவும் என்னை குத்தம் சொல்லிட்டு இருக்க இனி மேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே போக, எதுவாக இருந்தாலும், காலையில் பேசிக்கலாம் என்று தடுக்க, பரணி சண்முகத்தின் கையை தள்ளிவிட்டு வீட்டை விட்டு,கிளம்ப, வைகுண்டம், என்ன பரணி இது என்று கேட்க, இதுக்கு மேல இந்த வீட்டில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

சௌந்தரபாண்டி போட்ட திட்டம்: இன்றைய எபிசோடில், பரணி நடுஇரவில் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர பாக்கியம் இந்த நேரத்துல இங்க என்னடி பண்ற என்று கேட்க, சண்முகத்திற்கு அவங்க தங்கை மீதுதான் பிரியம், எப்போதும், அவங்களை பத்தித்தான் யோசிக்கிறான். அப்படி இருக்கும் போது நான் ஏன் அந்த வீட்டில் இருக்க வேண்டும், அதன் இங்கே வந்துவிட்டேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு பதறிப்போன பாக்யம், சண்முகம் அப்படிப்பட்ட ஆள் இல்லை. அவன் உன் மேல எவ்வளவு பாசம் வெச்சி இருக்கானு உனக்கே நல்ல தெரியும், நீ வீம்பு பிடிக்காமல் வீட்டுக்கு போ என்று சொல்ல, பரணி நான் போகமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்க, அந்த இடத்திற்கு சௌந்தரபாண்டின வர, வீட்டிற்கு வந்த பொண்ணை வானு சொல்லாமல், நீக்க வெச்சி கேள்வி கேட்குற என்று கோபப்படுகிறாள்.
நீ ஷண்முகத்தோட வந்து இருந்தா, வா என்று கூப்பிட்டு இருப்பேன். ஆனால் தனியா வந்திருக்கியே ஒழுங்காக வீட்டிற்கு கிளம்பி போயிடு, இல்லனா வா நானே விட்டுட்டு வரேன் என்று கையை பிடிக்க பாக்கியத்தின் கையை சௌந்தரபாண்டி பிடிக்கிறார். பொண்ணு இங்க தான் இருப்பா, அவளை நான் பார்த்துககொள்கிறேன் என்று பரணிக்கு சப்போர்ட் செய்து பேசி உள்ளே அழைத்து செல்கிறான். அப்போது, பாண்டியம்மா என்னடா, திடீர்னு பரணிக்கு சப்போர்ட் பண்ணி பேசுற என்று கேட்க, அக்கா அவ சண்முகத்துக்கிட்ட சண்டை போட்டு வந்திருக்கா, இந்த நேரத்தில் நாம பரணிக்கு ஆதரவாக பேசினாத்தான், அவ நம்பளை நம்புவா, இதையே காரணமாக வச்சு அவங்க இரண்டு பேரையும் பிரிக்க போறேன் என்று திட்டத்தை சொல்கிறான்
கோவத்தில் பரணி: அப்போது, பாக்கியம், ஏன்டி பரணி எல்லாம் தெரிஞ்சு தான் பண்றியா, உன் அப்பன் எப்படியாவது சண்முகம் குடும்பத்தை கெடுத்து, அந்த குடும்பத்தையே பிரிக்க வேண்டும் என்று பிளான் போட்டுட்டு இருக்கான் நீ, அதற்கு தகுந்த மாதிரி சண்டை போட்டுட்டு பெட்டி எடுத்துக்கிட்டு வந்து இருக்க என்று சொல்ல, பரணி, பாக்கியத்திடம் அப்பா என்னையும் சண்முகத்தையும் பிரிக்க தான் எனக்கு சப்போர்ட் செய்கிறார் என்று எனக்கு நல்லா தெரியுமா.. அவர், நினைச்சது நடக்காது. அதற்கு நான் இடம் தரமாட்டேன், அதை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். மறுபக்கம், சண்முகம் பரணியை நினைத்து வருத்தப்படுகிறான். நான் உன்னை புரிந்து கொள்ளலயா என்று புலம்புகிறான். அதே போல, பரணி எப்பவுமே உனக்கு தங்கச்சிங்க தான் முக்கியம்.. என்னை பத்தி எப்போதும் நீ நினைச்சதே இல்ல, இந்த முறை நான் அமைதியா போக போறது இல்ல என்று சொல்கிறாள்.

அதிர்ச்சியில் சண்முகம்: இதையடுத்து, மறுநாள் காலையில் சண்முகம் திண்ணையில் வந்து படுக்க, அங்கு வந்த சௌந்தரபாண்டி, பாத்தியா சனியா, என் பொண்ணு இல்லாமல் போன ஒரே நாள்லேயே இந்த சண்முகம் திண்ணைக்கு வந்துட்டான். இனிமேல் எப்போதும் நீ திண்ணையிலத்தான் என்று வம்பிழுக்கிறார். மேலும், நேத்து பரணி அவசரத்தில் ஒரு பெட்டியை மட்டும் எடுத்துட்டு வந்துவிட்டாள், இதனால், அவ பொருள் எல்லாத்தையும் கொண்டு வர சொன்னதாக சொல்கிறான். சண்முகம் அதை நம்ப மறுக்க சௌந்தரபாண்டி நான் வேணும்னா அவளையே வந்து சொல்ல சொல்லவா என்று கேட்கிறான். கடுப்பான சண்முகம், நீ என்ன கேட்பது நானே கேட்கிறேன் என்று பரணிக்கு போன் போட சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். ஆனால், பரணி போன் எடுக்காத காரணத்தால் சண்முகம் குழப்பம் அடைகிறான். இதையே காரணம் காட்டி, என்ன சண்முகம், பரணி போனை எடுக்களையா, அவ எடுக்க மாட்டா என்று சொல்ல, சண்முகம், பரணியின் பொருட்களை கொடுத்துவிட்டு, இது தான் பரணியின் பொருட்கள், இதுக்கு மேல எதாவது வேணும் என்றால் அவளையே வந்து எடுத்துக்கிட்டு போக சொல்லு என்கிறான்.

பரணி கழுத்துல நீ கட்டுன தாலி: அப்போது, சௌந்தரபாண்டி, பரணி சம்மந்தமான பொருட்களை கொடுத்துட்ட, அவ கிட்ட உன் சம்மதமாக பொருள் ஒன்னு இருக்கு.. அது தான் நீ கட்டுன தாலி, அத எப்போ வந்து எடுத்துக்க போற, கவலைப்படாத சண்முகம், கூடிய சீக்கிரம் தாலி உன்னை தேடி வரும் என்று சொல்லி விட்டு கிளம்பி வருகிறான். இதைக்கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி சண்முகம் இனிமே நீ அந்த வீட்டு பக்கம் போகக்கூடாது என்று பொருட்களை கொடுத்து விட்டு சென்றதாக பொய் சொல்கிறார். இதைக்கேட்ட பரணி, அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறாள். அப்போது, பாக்கியம் அதை நம்ப மறுத்து, பரணி உன் அம்மாவை பத்தி உனக்கு நல்லா தெரியும்ல, அவர் குடும்பத்தை கெடுக்க என்ன வேணும்னாலும் செய்வார். சண்முகம் நிச்சயம் அப்படிசெய்ய மாட்டான் என்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.