ARTICLE AD BOX
பரங்கி விதைகள் நீரிழவு நோயைக் கட்டுப்படுத்துவதில் எவ்வாறு உதவுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் சுஸ்மிதா கூறுகிறார். நீரிழிவு நோயாளிகளுக்கு, உங்கள் உடல் போதிய இன்சுலினை சுரக்காததால் உங்களுக்கு இந்த தொல்லைகள் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்னையின்போது நீங்கள் உணவு கட்டுப்பாடு செய்யவேண்டும். பரங்கி விதைகள் அதற்கு உதவும். பரங்கி விதையின் முக்கிய நன்மைகளுள் ஒன்று, அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவது உள்ளது. இது நல்ல ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். முக்கிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இது நீரிழிவு நோயான சர்க்கரையைக் கட்டுப்படுத்த எப்படி உதவுகிறது என்று பாருங்கள்.
பரங்கி விதைகள்
பரங்கி விதைகள் என்பது பெபிடாஸ் எனப்படுகிறது. இது பரங்கிக்காயில் உள்ள சாப்பிடக் கூடிய விதைகள் ஆகும். தட்டையாகவும், நீள்வட்ட வடிவிலும் இருக்கும். இனிப்பாக இந்த விதைகள் இருக்கும். இதை வறுத்து உப்பு தூவி சாபிபடலாம் அல்லது பல்வேறு உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். இதில் ஆரோக்கிய கொழுப்புகள், நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் சிங்க், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற புரதச்சத்துக்கள் உள்ளது.
28 கிராம் பரங்கி விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள் 150, புரதம் 7 கிராம் (தாவர அடிப்படை) ஆரோக்கிய கொழுப்புகள் 13 கிராம் (ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்தது) நார்ச்சத்துக்கள் 1.7 கிராம் (செரிமானத்துக்கு உதவுகிறது) மெக்னீசியம், தினசரி தேவையில் 37 சதவீதம் (இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது) சிங்க், அன்றாட தேவையில் 14 சதவீதம் (நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது) இரும்புச் சத்துக்கள் அன்றாட தேவையில் 23 சதவீதம் (அனீமியாவைத் தடுக்கிறது). ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஈ, கரோட்டினாய்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் உள்ளது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த எப்படி உதவுகிறது?
பரங்கி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அதிகம் உள்ள மெக்னீசியம் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது. பரங்கி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உடல் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சி, ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் திடீரென உயர்வதைத் தடுக்கிறது.
இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள், பொதுவான உடல் வளர்சிதை ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகின்றன. இவையிரண்டும் நீரிழிவு நோயாளிகளின் கடுமையான பிரச்னைகள் ஆகும். இதில் உள்ள சிங்க், மற்ற முக்கிய வைட்டமின்கள் சேர்த்து நோய் எதிர்ப்பாற்றலை நன்றாக இயங்கச் செய்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
இந்த விதைகளை எப்படி சாப்பிடவேண்டும்?
• காய்ந்த விதைகளை அப்படியேவோ அல்லது வறுத்தோ ஸ்னாக்ஸ் போல் சாப்பிடலாம். ஒன்று அல்லது 2 ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். உப்பு அல்லது பல்வேறு ஃப்ளேவர்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். அதில் அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
• ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவுக்கு பொடித்து, சூப்கள், ஸ்மூத்திகள் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம்.
• அரை கப் பரங்கி விதைகளை ஓரிரவு ஊறவைத்து, அரைத்து பிழிந்து, ஸ்மூத்தி, ஓட்ஸ் அல்லது தேநீரில் கலந்து சாப்பிடலாம். பாலுக்கு மாற்று உணவாகக் கொள்ளலாம்.
• ஒரு டேபிள் ஸ்பூன் பரங்கி விதைகள், தயிர் அல்லது பாதாம் பால் அரை கப், ஒரு வாழைப்பழம், பட்டைப்பொடி கால் ஸ்பூன், ஒரு கைப்பிடியளவு பாலக்கீரை சேர்த்து ஸ்மூத்தியாக்கி பருகலாம்.
• பெரிகள், பாதாம், வாலநட்கள், பரங்கி விதைகள், சூரிய காந்தி விதைகள், தேங்காய் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
மேலும் வாசிக்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சாபி சமோசாவை இனி வீட்டிலே எளிதாக செய்யலாம்.
பக்கவிளைவுகள்
• பரங்கி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது நல்லதுதான் என்றாலும், இது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மறறும் வயிற்று வலியை அதிகம் சாப்பிடும்போது ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக கொழுப்புகள் சிலருக்கு செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
• சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் எரிச்சல், சருமத்தில் ராஷ்கள், தொண்டையில் கரகரப்பு மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
• பரங்கி விதைகளில் கலோரிகள் அதிகம். அதிகம் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கும். எனவே அளவாக மட்டுமே பரங்கி விதைகளை சாப்பிடவேண்டும்.
பரங்கி விதைகள் சுவையானது. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இதில் உள்ள அதிக மெக்னீசியச் சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து, ரத்த சர்க்கரையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. இது குணப்படுத்தாது என்றாலும், இந்த விதைகளை எடுத்துக்கொள்வது, ஒட்டுமொத்த வளர்சிதைக்கும் நல்லது. நீரிழிவுடன் தொடர்புடைய தொல்லைகளைப் போக்குகிறது. எனவே இதை அளவாக எடுப்பது அவசியம். அதிகம் சாப்பிட்டால் வாயு, வயிற்று வலி போன்றவை ஏற்பட்ட தொல்லை தரும்.
இந்தக்கட்டுரை ஊட்டச்சத்து நிபுணர் சுஸ்மிதாவால் சரிபார்க்கப்பட்டது.

டாபிக்ஸ்