ARTICLE AD BOX
பயனர்களுக்கு குட்நியூஸ்!. டாடா ப்ளே மற்றும் ஏர்டெல் இணைப்பு?. இறுதிகட்டத்தில் ஒப்பந்த பணி!.
சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய டிடிஎச் வணிக நிறுவனமான டாடா ப்ளேவுடன் இணைவதற்கான ஒப்பந்த பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகானாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, பார்வையாளர்கள் படிப்படியாக DTH இலிருந்து டிஜிட்டல் தளங்களுக்கு மாறி வருகின்றனர். எனவே, DTH சந்தாக்களின் சரிவை நிவர்த்தி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில், ஏர்டெல் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய டிடிஎச் வணிக நிறுவனமான டாடா ப்ளேவுடன் இணைவதற்கான ஒப்பந்த பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் டாடா ப்ளே நிறுவனத்தில், ஏர்டெல் நிறுவனம், 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும். மேலும் டாடா பிளே பங்குதாரர்களான வால்ட் டிஸ்னி உள்ளிட்டோர் 45-48 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள். இதுமூலம் ஏர்டெல், மொபைல் அல்லாத (non-mobile) பிரிவுகளிலிருந்து அதன் வருவாயை அதிகரிக்க உதவும் என்று தெரிவித்துள்ளது. இரு தரப்பும் ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு செயல்பாடுகளும் ரூ. 6,000-7,000 கோடி அளவில் மதிப்பிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டாடா ஸ்கை என்று அழைக்கப்பட்ட டாடா ப்ளே, ஆரம்பத்தில் News Corp நிறுவனத்துடன் கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்டது. 2019-இல், வால்ட் டிஸ்னி, 21st Century Fox-ஐ வாங்கிய பின்னர், அந்த நிறுவனத்தின் பங்குகளை டாடா ப்ளே கைப்பற்றியது. அதேபோல், இந்த இணைப்பு மூலம், கிட்டத்தட்ட 20 மில்லியன் வீடுகளுக்கு சேவை செய்யும் டாடா ப்ளேவின் பரந்த சந்தாதாரர் தளத்தை அணுக ஏர்டெல்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த இணைப்பு, ஒருங்கிணைந்த சந்தா சலுகைகளுக்கு வழிவகுக்கும், இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே திட்டத்தின் மூலம் broadband, தொலைத்தொடர்பு (telecom) மற்றும் DTH சேவைகளை அணுக முடியும். இந்த ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டில் Videocon d2h மற்றும் Dish TV இணைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு வரவுள்ளது. இது DTH துறையில் மற்றொரு முக்கிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
2024 செப்டம்பரின் நிலவரப்படி, இரண்டு நிறுவனங்களும் மொத்தம் 35 மில்லியன் கட்டண சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன, மற்றும் (Financial Year 2024") 2024 நிதியாண்டு வருவாய் ரூ. 7,000 கோடியை தாண்டியுள்ளது. பார்வையாளர்கள் டிஜிட்டல் தளங்களை நோக்கி அதிகளவில் மாறுவதால், இந்த இணைப்பு DTH துறைக்கு மேலும் ஒருங்கிணைப்பைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஏர்டெல் டாடா பிளேவின் 19 மில்லியன் வீடுகளுக்கு அணுகும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டாரின் புதிய பெயரான ஜியோ ஹாட்ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹாட்ஸ்டார் இணைப்பிலிருந்து டிஸ்னி வெளியேறியதைத் தொடர்ந்து, ஜியோ முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஷிப் லீக்கிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிய செயலி செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.