பயணிகளின் கனிவான கவனத்திற்கு! சென்னையில் 4வது ரயில் முனையம்.. வெளியான குட் நியூஸ்!

12 hours ago
ARTICLE AD BOX

பயணிகளின் கனிவான கவனத்திற்கு! சென்னையில் 4வது ரயில் முனையம்.. வெளியான குட் நியூஸ்!

Chennai
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வில்லிவாக்கம்-பெரம்பூர் இடையே நான்காவது ரயில் முனையம் அமையும் என பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் என சென்னையில் 3 ரயில் முனையங்கள் இருக்கின்றன. ஆனால், சென்னையிலிருந்து அரக்கோணம் மார்கமாக காட்பாடி, ஜோலார்பேட்டை, பெங்களூர், மங்களூர், திருவனந்தபுரம், மும்பை, திருப்பதி என பல முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அங்கிருந்து சென்ட்ரல் வரும் ரயில்கள், பெரம்பூர் தாண்டி உள்ளே வருவதற்கு மிகவும் தாமதமாகிறது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

chennai railway southern railway

எனவே, இந்த நிலையை மாற்ற, புதிய ரயில் முனையம் அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கனவு. இப்படி இருக்கையில், இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறியுள்ளார்.

நேற்று சென்னை அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் 76வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்த விஸ்வநாத் பின்னர் உரையாற்றினார். அதில்,

"சென்னை கோட்டம் தினமும் 11.5 லட்சம் மக்களை கையாண்டு வருகிறது. இதில் 8.5 லட்சம் பயணிகள் புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர். 3 லட்சம் பேர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கின்றனர். இப்படியாக சென்னை ரயில்வே கோட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு வருவாயை ஈட்டியிருக்கிறது. கடந்த 2023-2024ம் ஆண்டில் ரூ.4,513 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது. 2024-2025 கடந்த டிசம்பர் வரை ரூ.3,300 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக சென்னையில் நான்காவது ரயில் முனையம் வில்லிவாக்கம்-பெரம்பூர் இடையே அமைப்பது குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மட்டுமல்லாது 17 ரயில் நிலையங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் மூலம் இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தவிர 27 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் ரூ.160 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன.

ரயில்களை இயக்குவதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை ரயில்வே கோட்டம் 2.88% அளவில் சிறிய முன்னேற்றம் கண்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 19,761 ரயில்களை சென்னை கோட்டம் இயக்கியிருக்கிறது. இதில் 17,101 ரயில்கள் சரியான நேரத்தில், காலதாமதம் இன்றி இயக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல ரயில்வே காவல்துறையினர் காணாமல் போன சுமார் 726 பேரை கண்டுபிடித்துள்ளனர். இதில் சில குழந்தைகளும் அடங்கும். அதேபோல 28 பயணிகளின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளனர்.

மட்டுமல்லாது சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்ட்ரல்-கூடூர் ஆகிய வழத்தடங்களில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. எழும்பூர்-விழுப்புரம் வரையில் இதே வேகத்தில் ரயில்களை இயக்க, தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை 40 ரயில் நிலையங்களில் சிசிடிவி அலர்ட் சிஸ்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் 99 ரயில் நிலையங்களில் இது செயல்பாட்டுக்கு வரும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
English summary
There is talk of a fourth railway terminal being built between Villivakkam and Perambur in Chennai, and a report for this has been prepared and sent to the Railway Board for approval.
Read Entire Article