ARTICLE AD BOX
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அக்ரா-தில்லி நெடுந்தாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அடர்த்தியான மூடுபனி இருந்ததால் எதிர்பாராதவிதமாக வானங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. மேலும் 230 ஆடுகளை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கிய ஆறு வாகனங்கள் மீது மோதியது. இதனால் 100 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் கடுமையான மூடு பனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.