ARTICLE AD BOX

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்(38). இவரது மனைவி சுலு(36). இந்த தம்பதிக்கு 2 வயதுடைய ஆதி என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த அஜித் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். அதன் பிறகு ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக வேலை பார்த்தார். கடந்த 2 வாரத்திற்கு முன்பு அஜித்துக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
மேலும் பொருளாதார சிக்கல்களை நினைத்து மன உளைச்சலில் இருந்த அஜித்தும், சுலுவும் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.