ARTICLE AD BOX

பொலிவியா நாட்டில் ஆரூரோ என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதனை காண்பதற்காக பெரும்பாலான மக்கள் சுற்றுலா பேருந்துகளில் சென்றனர். அதில் பொடோசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து விபத்துகுள்ளானது.
அந்த விபத்தில் 37 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 39 பேர் பலத்த காயங்களுடன் உயுனி நகரில் உள்ள 4 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.