ARTICLE AD BOX

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது என்னுடைய மகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண பெண்களின் நிலை என்னவாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல பெண்கள் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.
இதனால் நாமும் அமைதியாக இருக்கக் கூடாது என்பதால் தான் தற்போது புகார் கொடுக்க வந்துள்ளேன் என்றார். தன்னுடைய மகள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சில நபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய மந்திரியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.