ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே தொடுகாடு என்ற கிராமத்தில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். தனியார் தொழிற்சாலை ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் இவருக்கு 27 வயதில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி சரிவர வேலைக்கு செல்லாத நிலையில் அமாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஒருமுறை கிருஷ்ணமூர்த்தி தாய் ஜெயந்தியிடம் பணம் கேடகவே.. தன்னிடம் பணம் இல்லை என்றும், பணம் கிடைக்கும் வரை ஏதாவது வேலைக்கு சென்று சம்பாதித்துக் கொள் என தாய் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் வாக்குவாதம் முற்றியது.
மகனின் அட்டூலியம் தாங்காத ஜெயந்தி உடனடியாக வீட்டிலிருந்து பெட்ரோலை எடுத்து மகன் என்று கூட பாராமல் கிருஷ்ணமூர்த்தி உடலில் ஊற்றி தீ வைத்து விட்டார். அவ்வளவுதான் வலியால் அலறி துடித்த கிருஷ்ணமூர்த்தியின் குரல் கேட்டு மனைவி பாரதி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து என்னவென்று பார்த்தனர். அங்கு நெருப்பு சூழ கிருஷ்ணமூர்த்தி துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். 24 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி 2025 பிப்ரவரி 25ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இதுகுறித்து பாரதி மப்பேடு காவல் நிலையத்தில் தனது மாமியார் ஜெயந்தி மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு ஜெயந்தியை கைது செய்தனர். பெற்ற மகனை தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more : காதலர் தினத்தில் ஆடம்பர காரை பரிசளித்த கணவன்.. மனைவி செய்த செயலால் குப்பையில் வீசப்பட்ட சொகுசு கார்..!!
The post பணம் கேட்டு தொல்லை.. மகன் என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தாய்..!! நடந்தது என்ன? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.