பண விவகாரம் தொடர்பாக பிரச்னை மகனை சுட்டுக்கொன்ற பாஜ எம்எல்ஏவின் சகோதரர்

2 hours ago
ARTICLE AD BOX

உஜ்ஜைனி: மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள காடியா தொகுதியின் பாஜ எம்எல்ஏ சதீஷ் மாளவியா. இவரது மூத்த சகோதரர் மங்கள் மாளவியா. இவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருக்கின்றார். இந்நிலையில் குடும்பத்திற்கு சொந்தமான கடையில் இருந்து பணம் எடுப்பது தொடர்பாக தனது மகன் அரவிந்துடன்(30) தகராறு செய்ததாக தெரிகின்றது.

வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் தனது மகனை சுட்டுக்கொன்றார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மங்கள் மாளவியாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பண விவகாரம் தொடர்பாக பிரச்னை மகனை சுட்டுக்கொன்ற பாஜ எம்எல்ஏவின் சகோதரர் appeared first on Dinakaran.

Read Entire Article