ARTICLE AD BOX
பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பாஜக அரசு திட்டமிட்டு குறைத்து வருவதாகவும், இதனால் இளைஞர்களின் கல்வி வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நாட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பாஜக அரசு குறைத்துள்ளது வெட்கக்கேடானது. அரசு புள்ளிவிவரங்களின்படி அனைத்து உதவித்தொகைகளிலும் ஆண்டுதோறும் சராசரியாக 25 சதவீதம் குறைவான நிதியை மட்டுமே செலவிட்டுள்ளது
பின்தங்கிய மாணவர்களுக்குச் சரியான ஆதரவு வழங்கப்படாவிட்டால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எவ்வாறு உறுதி செய்யும்?
நாட்டின் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், அவர்களின் திறன்கள் ஊக்குவிக்கப்படாவிட்டால், நம் நாட்டின் இளைஞர்களுக்கு எப்படி வேலைகளை உருவாக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, ராகுல் காந்தி பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகளைக் கடுமையாகச் சாடினார், இரண்டும் அரசியலமைப்பிற்கு எதிரானவை என்று கூறினார்.
இந்தியாவில் சித்தாந்தப் போராட்டம் நடந்து வருகிறது. ஒருபுறம், காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை நம்புகிறது, அதற்காகப் போராடுகிறது. மறுபுறம், இந்திய அரசியலமைப்பை, பி.ஆர். அம்பேத்கர், மகாத்மா காந்தியின் அரசியலமைப்பை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக அதைப் பலவீனப்படுத்தி, அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றன.
இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவைப் பற்றிய சிந்தனையாகும். இந்த அரசியலமைப்பில் இந்தியாவின் சிறந்த ஆளுமைகளின் குரலும் சிந்தனையும் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.