பட்டாம்பூச்சியால் பறிபோன உயிர்..!! பிரேசிலை உலுக்கும் 14 வயது சிறுவனின் மரணம்..!!

3 days ago
ARTICLE AD BOX

பட்டாம்பூச்சியின் எச்சங்களை ஊசியில் ஏற்றி தனக்குத்தானே செலுத்திக் கொண்ட சிறுவன் – சிகிச்சை பலனின்றி பலி..!!

பிரேசில் நாட்டில் பட்டாம்பூச்சியின் எச்சங்களை ஊசியில் ஏற்றி தனக்குத்தானே செலுத்திக் கொண்ட 14 வயது சிறுவன் உயிரிழந்தார். பிரேசிலின் பிளானால்டோவைச் சேர்ந்த  மொரேரா என்ற 14 வயது சிறுவன், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வாந்தி, பேதியால் அவதியுற்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், முதலில் தான் விளையாடும் போது காலில் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து, தான் பட்டாம்பூச்சியின் எச்சங்களை ஊசியில் ஏற்றி காலில் செலுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக சிறுவன் அங்கிருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு 7 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article