மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் 2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான ஆண்டு நிதி நிலை அறிக்கையை ( பட்ஜெட் ) தாக்கல் செய்தார். அதில் வரும் நிதியாண்டில் எவ்வளவு ரூபாய் வருவாய் வரும் என்றும், எவ்வளவு ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும், எவ்வளவு கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மற்றும் கடன்களுக்காக, எவ்வளவு ரூபாய் வட்டியாக செலுத்த உள்ளது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

வருவாய் -செலவினம் எவ்வளவு:

வரும் 2025- 2026 ஆண்டிற்கான நிதியாண்டில், மொத்த வருவாய் ரூ.34.96 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் செய்யப்படும் செலவின தொகையானது ரூ. 50.65 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருவாயை விட , செலவினம் அதிகமாக இருப்பதால் கடன் வாங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 24 சதவிகிதம் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சந்தைக் கடன்களுக்கான மொத்த மதிப்பீட்டில் ரூ. 14.82 லட்சம் கோடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📍Central Government Expenditure (Budget Estimates for 2025-26 in ₹ crore) 👇#UnionBudget2025 #BudgetForViksitBharat pic.twitter.com/o3ZhVlkc7E

— PIB India (@PIB_India) February 1, 2025

கடன் - வட்டி ; விமர்சனங்கள்:

மேலும், செலவு செய்யப்படும் மதிப்பில் 20 சதவிகிதம் கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 12.76 லட்சம் கோடி வட்டியாக செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலரும் 14.82 லட்சம் கோடி கடன் வாங்குகிறோமா என்றும் அதில் 12.76 லட்சம் கோடி வட்டியாக செலுத்துகிறோமா என்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அதில், சிலர் ஏன் இவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்றும், தேவையற்ற இலவசங்களை குறைக்கலாம் என்றும், தேர்தல் காலங்களில் வாக்காளர்களை கவர்வதற்காக அரசாங்கம் தேவையற்ற இலவசங்களை தவிர்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேவையற்ற செலவினங்களை குறைத்தால், கடன் வாங்குவது குறையும் என்றும், இதனால் இவ்வளவு அதிக தொகையிலான வட்டி தொகையை செலுத்த தேவையில்லை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read: Income Tax 2024 Vs 2025: கடந்த பட்ஜெட் வரி விகிதம் Vs புதிய பட்ஜெட் வரி விகிதம்: எவ்வளவு இருந்தது ?

கடன் நல்லது:

ஆனால், சிலர் கடன் வாங்குவது நல்லதுதான். ஏனென்றால், தற்போது இந்தியாவில் போதிய வளர்ச்சிக்கு அடைவதற்காக பயன்படுத்தக் கூடிய அளவில் நிதி இல்லை. அதற்காக, போதிய வளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்தால், நாம் மிகவும் பின்னோக்கியே உலக நாடுகளுடன் பயனிப்போம்.

குறிப்பாக சாலை வசதிகள், கல்லூரிகள் அமைப்பது , தொழில்கள் தொடங்குவது எல்லாம் , தற்போதைய செலவு என்றால், எதிர்காலத்தில் மிகப்பெரிய வருவாயை தரக்கூடியதாகவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், வளர்ச்சியை ஏற்படுத்த கூடியதாகவும் அமையும் என கருத்துகளும் எழுகின்றனர்.

இந்தியாவின் , உடனடி வளர்ச்சிக்கு கடன் வாங்குவது தவறில்லை; காலத்திற்கு ஏற்ப உலக நாடுகளுடன் இணைந்து பயணிக்க வேண்டும். ஆனால், அதே சமயத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது அவசியம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read:Budget 2025: பழைய வருமான வரி முறை ரத்தாகிறதா? நிலவரம் என்ன?