ARTICLE AD BOX
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிரதமர் மோடியை பாதுகாக்க எஸ் பி ஜி என்ற பாதுகாப்பு படை உள்ளது. அந்த பாதுகாப்பு படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதன்படி பிரதமரின் பாதுகாப்பிற்கு நாளொன்றுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்பட உள்ளது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 5.58 இலட்சமும் ஒரு நிமிடத்திற்கு ரூ.9 33 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு இந்த சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.