படம் மாறலாம், ஆனா அந்த பெயர் மட்டும் மாறாது.. ஆதிக் ரவிச்சந்திரன் Ex-இவங்க தானா?

1 day ago
ARTICLE AD BOX

Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

இதற்கிடையில் நேற்று இந்த படத்தில் திரிஷா இருப்பதை உறுதிப்படுத்தி அவருடைய கேரக்டர் பெயரையும் அறிவித்திருந்தார்கள்.

இந்த படத்தில் திரிஷாவுக்கு ரம்யா என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் Ex-இவங்க தானா?

இந்த அப்டேட் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ஆதிக் ரவிச்சந்திரனை கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.

அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு படம் ஹீரோ மற்றும் ஹீரோயினை மாற்றினாலும் அந்த ஒரு பெயரை மட்டும் மாத்தவே இல்லை.

அது யாருன்னு சொல்லுங்க ஆதிக் என்ற கேள்வி தான். ஆதிக் ரவிச்சந்திரன் முதன் முதலில் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஆனந்தியின் பெயர் ரம்யா.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தமன்னாவின் பெயர் ரம்யா. பகீரா படத்தில் அமரா தஸ்தூர் பெயர் ரம்யா.

மார்க் ஆண்டனி படத்தில் ரித்து வர்மா பெயர் ரம்யா. இப்போது ஐந்தாவது முறையாக த்ரிஷாவுக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறார்.

ஒரு வேளை ரம்யா தான் ஆதிக் ரவிச்சந்திரனின் Ex பெயராக இருக்குமோ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

Read Entire Article