ARTICLE AD BOX
விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
காரணம், இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது.
’இங்க என்ன சொல்லுது... ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?’ என்கிற வசனத்தை இன்றையகால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவிற்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக இருந்தன.
இதையும் படிக்க: இந்தியன் - 3 அப்டேட்!
மேலும், சென்னை பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீட்டிலேயே இப்படம் 1000 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்துள்ளது. இதுவே, மறுவெளியீட்டில் ஆயிரம் நாள்களைக் கடந்த முதல் இந்திய சினிமா.

இந்த நிலையில், விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனால், ‘இது படமல்ல, கவிதை’ என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு படத்திற்கும் அவர்கள் வாழ்க்கைக்குமான தொடர்புகளைக் குறிப்புகளாக எழுதி வருகின்றனர்.
15 years ago, Karthik and Jessie walked into our hearts, bringing with them a love story that felt so real, so raw, and so unforgettable. Gautham Vasudev Menon’s poetic storytelling, A.R. Rahman’s magical music, and the chemistry between #STR & #Trisha made this film a timeless… pic.twitter.com/ASUQ9Woj72
— Samuel (@DeadmanxXd) February 26, 2025