ARTICLE AD BOX

நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான ஒருவர் .இவர் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது. ஆனாலும் கூட ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். முதல் பாகத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை கடந்த வருடம் வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
ஆனால் இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. சுந்தர் சி தான் இயக்குகிறார் என்று அறிவித்தனர். படத்தின் பூஜையானது முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்நிலையில் படபிடிப்பின் போது காஸ்டியூம் தொடர்பான பிரச்சனையில் உதவி இயக்குனரை நயன்தாரா மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்து சிந்தர்சி படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளாராம். நயன்தாராவை மாற்றி விட்டு தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.